Robo Shankar: எப்பவும் சிரிக்க வச்சுட்டே இருப்பாரு..ரோபோ சங்கர் மறைவு பேரிழப்பு! நடிகர் சிம்பு வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம் அடைந்திருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ரோபோ சங்கரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் சிலம்பரசன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

1978 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த ரோபோ சங்கர், ஆரம்பத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆக கலைவாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 1997ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த தர்மச்சக்கரம் திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானார்.

அதற்குப் பிறகு ஒரு இடைவெளிக்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு வெளியான தீபாவளி படத்தில் மறுபடியும் திரையுலகில் தடம் பதித்தார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர், தனித்துவமான காமெடி ஸ்டைலால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

Robo Shankar

ரோபோ சங்கர்

குறிப்பாக தனுஸ் உடன் நடித்த மாரி, வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்புவுடன் நடித்த காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விமல் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வந்தார். சூர்யாவுடன் நடித்த சிங்கம் படமும் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. இதற்கிடையே திடீரென அவருக்கு மஞ்சள் கால மாலை பாதிப்பு ஏற்பட்டு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. உடல் எடையும் மிகக் கடுமையாக சரிந்தது. தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறிய ரோபோ சங்கர் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தார்.

ரோபோ சங்கர் குடும்பம்

ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும் இந்திரஜா என்ற மகளும் உள்ளனர். இந்திரஜாவும் திரையுலகில் தான் உள்ளார். முதன் முதலாக இந்திரஜா விஜய் உடன் பிகில் படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இந்த நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திரஜாவுக்கு திருமணமான நிலையில் சமீபத்தில் தான் ரோபோ சங்கருக்கு பேரக்குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

ரோபோ சங்கர் உடல்நிலை

இந்நிலையில், சமீபத்தில் ஒரு படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார். அவர் இந்த ஆண்டு வெளியான அம்பி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஹீரோவாக நடித்த முதல் படம் அவரின் கடைசி படமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

சிம்பு இரங்கல்

ரோபோ சங்கரின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் நடிகர் சிம்பு அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்," நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+