Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மல்லிப்பூ மணக்குது சங்கரு.. அலங்காரம் பண்றாங்க.. ரோபோ சங்கரை பார்த்து கதறி சொன்ன மனைவி பிரியங்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை துரைப்பாக்கத்தில் 'காட்ஸில்லா' ஷூட்டிங்கில் இருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார் ரோபோ சங்கர்.. பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையும் தரப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். இந்நிலையில், இன்று இறுதிச்சடங்குகளை , மகள், மருமகன் இருவரும் செய்த நிலையில், ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ரோபோ சங்கரின் துர்மரணம் பலருக்கும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. அவரது வயிற்றுப் பகுதி மோசமாக பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் போய்விட்டது.. எனினும், நேற்றிரவு 9.05 மணியளவில் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

Robo Sankar Priyanka

குடலில் ரத்தப்போக்கு

"ரோபோ சங்கர், செப்டம்பர் 16ம் தேதி அன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு குடலில் ரத்தப் போக்கு இருந்தது. மேலும் உள் உறுப்புகள் செயலிழந்த நிலையில் வயிற்றுப்பகுதியிலும் மிக தீவிரமான பிரச்னைகள் இருந்தன.

தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு எங்கள் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதிலும் பலன் அளிக்கவில்லை. செப் 18ம் தேதி அன்று இரவு 9.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியானது.

ரோபோ சங்கர் மரணம்

இதைக்கேட்டு ரோபோ சங்கருடன் ஆரம்ப கட்டத்திலிருந்து பழகியவர்கள் முதல் தற்போது நெருக்கமானவர்கள் வரை இதயம் இடிந்து போய் உள்ளனர்..

அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காகவும், பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் அவரது வளசரவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரோபோ சங்கரின் உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஷயத்தை கேள்விப்பட்டதுமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

உதயநிதியை பார்த்ததுமே, ரோபோ சங்கர் மனைவி, "அண்ணா இன்னைக்கு அப்பாயிண்ட்மெண்ட் தந்திருக்காங்க, அண்ணா அப்படின்னு அண்ணனிடம் உரிமையாக கேளு சங்கா... கலைஞர் கையால் கலைமாமணி வாங்கினேன்னு பெருமையாக சொல்லுவியே" என்று கதறியபடி சங்கரின் உடலை பார்த்து கதறியது காண்போரை கலங்கடிக்க செய்தது.

மனைவி பிரியங்கா கதறல்

ரோபோ சங்கரின் இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னால், அவருக்கு துணையாக நின்றவர் மனைவி பிரியங்காதான்.. இவரும் ஒரு நடிகை, நடனக்கலைஞராக இருந்தாலும், தன்னுடைய கணவரின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கை வகித்தார்.. திருமணமாகி 22 வருட காலமாகியும், இவர்களது அந்நியோன்யமும், பரஸ்பர அன்பும், மரியாதையும் எப்போதுமே குறைந்ததில்லை..

எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், கணவரை கிண்டல் செய்வதுபோல பேசினாலும், அதற்கு பின்னாலுள்ள அன்பை பதிவு செய்துவிட்டு போவார் பிரியங்கா..

ஒருமுறை தன்னுடைய கணவருடனான காதல் குறித்து பிரியங்கா பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில், "தன்னுடைய கடைசி மூச்சு வரை கணவருடன் காதலர்களாகவே வாழ விரும்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இப்போது ரோபோ சங்கரின் சடலத்தை கண்டு கதறி அழுவதை கண்டு பிரபலங்களும் கண்கலங்கி போயிருக்கிறார்கள்..

மல்லிப்பூ மணக்குது சங்கரு

இன்று மதியம் 3 மணிக்கு மேல் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும், 4.30 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, இறுதி சடங்குகளும் ரோபோவின் வீட்டில் நடைபெற்றன.

அப்போது பிரியங்கா தலையில், அவரது உறவினர்கள் மல்லிகைப்பூவை வைத்தனர்.. உடனே பூவை தொட்டுப்பார்த்த பிரியங்கா, "தலையில் மல்லிப்பூ வைக்கறாங்க சங்கரு, மல்லிப்பூ பார்த்தியா மாமா, எனக்கு அலங்காரம் பண்றாங்க சங்கரு.. மல்லிகைப்பூ மணக்குது சங்கரு" என்று இடிந்து போய் அழுதுகொண்டே பேசினார்.. இதைப்பார்த்த உறவினர்களும் கலங்கினார்கள்..

பின்னர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் வளசரவாக்கத்தில் துவங்கியது.. மகள் இந்திரஜா தந்தையின் இறுதி ஊர்வலத்தில் சொம்பில் நீருடன் நடந்து சென்றதை பார்த்து துமக்களும் கலங்கி போனார்கள்.. அதேபோல கணவரின் இறுதி ஊர்வலத்தில், ஆவேசத்துடன் நடனமாடினார் பிரியங்கா..

நெற்றி நிறைய விபூதியுடன், மனம்நிறைய துக்கம், இழப்புடன் பிரியங்கா நடனமாடி, தன்னுடைய கணவரை இறுதி ஊர்வலத்தில் வழியனுப்பினார். ரோபோ சங்கருக்கு மகள், மருமகன் இருவருமே இறுதிச்சடங்கை நடத்தினார்கள்.. அப்போது இந்திரஜா, அவரது கணவர், பிரியங்கா 3 பேரும் கட்டிப்பிடித்து கதறி அழுதார்கள்.. இறுதியில் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+