Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indraja Shankar: "அண்ணா ஏன் இப்படி பண்றீங்க.." ரோபோ சங்கரை ஆம்புலன்ஸில் ஏற்றிய போது கலங்கிய இந்திரஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் (Robo Shankar Death news) உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிய போது சற்று நிலைத்தடுமாறியதால் பதறிய மகள் இந்திரஜா, "அண்ணா ஏன் ணா இப்படி பண்றீங்க, அப்பாணா" என அழுதபடியே சொன்னது காண்போரை கலங்க வைத்தது.

ரோபோ சங்கருக்கு கடந்த 16ஆம் தேதி படப்பிடிப்பில் இருந்த போது தலைச்சுற்றல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மோசமான உடல்நிலையில் வந்ததாக சொல்லப்படுகிறது.

Robo Shankar Tamil Actor

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ஏற்கெனவே வயிற்றில் சில பிரச்சனைகள் இருந்த நிலையில் அவருடைய இரைப்பை குடலில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது.

ரத்த போக்கு

இதையடுத்து அவரது ரத்தப்போக்கை நிறுத்த மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர். ஆனாலும் அந்த சிகிச்சை பலனின்றி நேற்று (செப் 18) இரவு 9.05 மணிக்கு ரோபோ சங்கர் காலமானார் என செய்தி அறிவிக்கப்பட்டது.

வளசரவாக்கம் வீட்டில்

இதையடுத்து அவரது உடலை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அதில் இந்திரஜா, அவருடைய மாமியார் வளர்மதி, ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா ஆகியோர் அமர்ந்தனர்.

மருத்துவமனை ஊழியர்கள்

பின்னர் ரோபோ சங்கரின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றிய போது திடீரென சற்று நிலைத்தடுமாறியது. உடனே பதறிய இந்திரஜா, "அழுதபடியே அண்ணா ஏன் ணா இப்படி பண்றீங்க" என கேட்டார். அந்த உடலை ஏற்ற அவரும் உதவினார்.

ரோபோ சங்கர்

ரோபோ சங்கருக்கு அவரது மகள் இந்திரஜா என்றால் கொள்ளை பிரியம். அந்த மகளுக்காகவே ஓடி ஓடி உழைத்து பணம் சம்பாதித்தார். இதை வைத்துதான் பிரம்மாண்டமாக கல்யாணம், வளைகாப்பு, பேரன் பிறந்து 100 ஆவது நாள் என விமரிசையாக கொண்டாடினார்.

பந்தா இல்லாதவர்

எந்த பந்தாவும் இல்லாமல் பழகக் கூடியவர் சங்கர். இவர் அந்த நாட்களில் மேடையில் சில்வர் பெயிண்ட்டை தடவிக் கொண்டு ரோபோ போல் உடல் அசைவுகளை செய்ததால் அவர் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார்.

இறப்புக்கு காரணம் என்ன

இவரது உடலில் அந்த காலத்தில் போடப்பட்ட சில்வர் பெயிண்ட்டும் அதை அழிக்க பயன்படுத்தப்பட்ட மண்ணெண்ணெய்யும்தான் ரோபோ சங்கரின் உடலுக்கு பிரச்சனையாக மாறிவிட்டது என இயக்குநரும் குணச்சித்திர நடிகருமான இளவரசு தெரிவித்திருந்தார்.

Robo Shankar Tamil Actor

என்.எஸ்.பாஸ்கர் கருத்து

இந்த நிலையில் இறப்பு குறித்து நடிகர் என்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், "ரோபோ போல அவர் நடனமாடும் காலத்திலிருந்தே அவரை பார்த்திருக்கிறேன். தங்கமான குணம் கொண்டவர். அவரது மகள்தான் அண்மை நாட்களில் அவருடன் இருந்து பார்த்துக் கொண்டார்.

ஆன்மா சாந்தி

இறந்த பிறகு, "அதுதான் காரணம், இதுதான் காரணம்" என குற்றம் குறை சொல்வதில் ஒன்றும் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

யார் இந்த ரோபோ சங்கர்

மதுரையைச் சேர்ந்த ரோபோ சங்கர் ஆரம்பத்தில் அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரவிந்துடன் காமெடியில் கலக்கினார். பின்ர் விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். சிரிச்சா போச்சு, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சிரிக்க வைத்த அற்புதமான கலைஞர், தன்னை பற்றி எத்தனை வதந்திகள் விமர்சனங்கள் வந்தாலும் அதை சிரித்தபடியே ஏற்றுக் கொண்டு அடுத்த வேலையை பார்ப்பார். அவரது ஆன்மா சாந்தியடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+