Exclusive: தமிழ்நாட்டை ரொம்ப மிஸ் பண்றேங்க.. நெகிழும் ரோகிணி ஐ.ஏ.எஸ்.
Recommended Video
சென்னை: சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி இப்போது மத்திய அரசு பணிக்கு சென்றுள்ள ரோகிணி ஐ.ஏ.எஸ். அவர்களை பொங்கல் சிறப்புப் பேட்டிக்காக ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது பேசிய அவர், தமிழக மக்களை தாம் மிஸ் பண்ணுவதாகவும், தமக்கு மனநிறைவை தந்த மாநிலம் தமிழகம் என்றும் நெகிழ்ந்தார்.
மேலும் ரோகிணி ஐ.ஏ.எஸ். அளித்த பிரத்யேக பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: புதிதாக சென்றுள்ள மத்திய அரசு பணி எப்படி உள்ளது? எந்த துறையில் இருக்கிறீர்கள்?

பதில்: மத்திய அரசு பணியில் இப்போது தான் புதிதாக இணைந்திருக்கிறேன். குறையேதுமில்லை,மிக நன்றாக பணிகள் செல்கின்றன. உயர்கல்வித்துறையில் துணைச் செயலாளராக இருக்கிறேன். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பொறுத்தவரை டெபுடேஷன் என்பது இயல்பாக நடக்கக்கூடிய ஒன்று தான்.
கேள்வி : தமிழகத்திற்கும், டெல்லிக்கும் உள்ள வித்யாசங்கள் என்ன? பணிச்சூழல் எப்படி உள்ளது?
பதில்: எனது கேரியரை தொடங்கியதே தமிழகத்தில் தான். அதனால் தமிழகம் மன நிறைவை தந்த மாநிலம் என்று தான் கூறுவேன். இருப்பினும் என்னை போன்ற அதிகாரிகளுக்கு இடமாறுதல், துறை மாறுதல் என்பனவெல்லாம் அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று. அதில் ஒரு பிரச்சனையுமில்லை. நாம் எங்கு பணிபுரிகிறோமோ அங்கு உளமாற, அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என நினைப்பேன்.
கேள்வி: தமிழகத்தில் எவ்வளவு காலம் இருந்தீர்கள்?
பதில்: ஐ.ஏ.எஸ். தேர்வில் நான் தமிழக கேடர், சுமார் 10 ஆண்டுகாலம் தமிழகத்தில் பணிபுரிந்திருக்கிறேன். 4 ஆண்டுகாலம் டெபுடேஷன் முடிந்து வாய்ப்பிருப்பின் மீண்டும் தமிழகத்திற்கு வருவேன். இதனிடையே தமிழக மக்களை ரொம்பவும் மிஸ் பண்றேன்.
கேள்வி : நீங்க சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஊடக வெளிச்சம் உங்கள் மீது எப்போதும் வீசும், அது எப்படி..?
பதில்: சேலம் மாவட்ட ஆட்சியராக நான் பணியாற்றியது எனக்கு கிடைத்த அதிர்ஷடம் என்று தான் சொல்ல வேண்டும். சட்டத்திற்குட்பட்டு மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியுமோ அதையெல்லாம் நான் செய்தேன். மற்றபடி அதைபற்றி கூற ஒன்றுமில்லை.
கேள்வி: நீங்கள் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறதே?
பதில்: ஆம், எனது தந்தை ஒரு விவசாயி. விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஐ.ஏ.எஸ்.ஆகியுள்ளேன். எனது தந்தை இன்றும் மஹாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் மாவட்டத்தில் உள்ள உப்பலே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications