Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆழ்வார் பேட்டையில் ஷேக் மேட் என்ற பப்பில் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலியாகினர். சென்னையை அதிர வைத்த இந்த விபத்திற்கான காரணம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள செயிண்ட் மேரிஸ் சாலையில் ஷேக் மேட் என்ற பப் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்கியுள்ளதால் தற்போது இந்த கேளிக்கை விடுதியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

Roof of the popular Sekhmet Bar collapsed in Chennai s busy Chamiers Road full details

ஐபிஎல் போட்டிகளுக்கான சிறப்பு சலுகையும் இந்த கேளிக்கை விடுதியில் கொடுக்கப்பட்டு இருந்ததாம். இதனால், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இன்று இரவில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் ‛பப்' மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அதாவது கட்டிடத்தின் முதல் தளத்தின் ரூப் எனப்படும் காங்கிரீட் மேற்கூரை இடிந்து முதல் தளத்தில் விழுந்துள்ளது.

முதல் தளத்தில் விழுந்ததில் அதிர்வு தாங்காமல் முதல் தளத்தின் காங்கீரிட்டின் சில பகுதிகள் கிரவுண்ட் ப்ளோரில் விழுந்துள்ளது.அடுத்தடுத்த தளங்கள் கீழே விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர், இரண்டு பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

விபத்து நடைபெற்ற செயிண்ட் மேரிஸ் சாலையில் மெட்ரோ ரயிலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து இரவு 8 மணிக்கு நடைபெற்றுள்ளது. விபத்து நடைபெற்ற உடனேயே காவல்துறையினரும் மீட்பு படையினரும் விரைந்து வந்தனர்.

விடுதிக்குள் சிக்கியிருந்த சுமார் 20 இளைஞர்கள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 பேரும் விடுதியில் பணியாற்றியவர்கள் ஆவர். சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்து இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணம் என்ன? எதனால் விபத்து ஏற்பட்டது என்பது குறித்து சென்னை அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடந்து வருவதால் இதனால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக பப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததா? என சந்தேகம் எழுந்தது.

பப் அமைந்துள்ள இடத்தின் சற்று தொலைவில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதைக்கான பணி நடந்து வருவதால் இது தொடர்பாகவும் விசாரணை நடந்தது. இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்த சென்னை மெட்ரொ ரயில் நிர்வாகம், "கேளிக்கை விடுதி அமைந்துள்ள பகுதியில் இருந்து 240 அடி தொலைவில் தான் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் விபத்து நடைபெற்ற கட்டிடத்தில் எந்த ஒரு அதிர்வும் ஏற்படவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் அங்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர். மற்ற 2 பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள். 7.15 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவித்தனர்.

விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மெட்ரோ ரயில் பணியால் இந்த விபத்து நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது. சென்னை மெட்ரோ பணி இங்க மட்டுமில்லை நிறைய இடங்களில் நடக்கிறது. பொதுவாக சொல்லிவிட முடியாது. விசாரணைக்கு பிறகு தான் சொல்ல முடியும். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். பப் உரிமையாளர் வந்துகொண்டிருக்கிறார். அவரிடம் விசாரித்து விட்டு சொல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை பெருநகர் கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா கூறியதாவது:- 3 பேர் உள்ளே இருந்தார்கள். முதல் தளத்தின் ரூப் போர்ஷன் தான் (காங்கிரீட் போர்ஷன்) அப்படியே முதல் தளத்தில் விழுந்துவிட்டது. இதில் முதல் தளத்தில் நின்றுகொண்டிருந்த 3 பேரும் சிக்கிக்கொண்டனர். இந்த பப்பில் வேலை செய்தவர்கள் 3 பேர் நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள்.

அவர்கள் மேலே தான் காங்கிரீட் போர்ஷன் விழுந்துவிட்டது. இது விழுந்ததில், கிரவுண்ட் ப்ளோர் ரூப் போர்ஷனும் கொஞ்சம் இடிந்து கீழே விழுந்துள்ளது. ஆனால் கிரவுண்ட் ப்ளோரில் யாரும் இல்லை. இதனால் அங்கு எந்த பாதிப்பும் இல்லை. முதல் தளத்தில் தான் அதிக டேமேஜ். அதிலே தான் 3 பேர் இருந்தார்கள். அவர்கள் மாட்டிக்கொண்டனர். மீட்பு பணி முழுவதுமாக நடந்த பிறகு மற்றவற்றை சொல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+