சென்னை டு பெங்களூர் தூரம் குறைஞ்சாச்சு! வெறும் 2 மணி நேரத்தில்! இதான் ரூட் மேப்.. லேட்டஸ்ட் அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை - பெங்களூர் அதிவிரைவுச்சாலை வரும் ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தச் சாலை மூலம் வெறும் 2 மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூரை அடையலாம். இந்த சாலை ரூட் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களாக சென்னை, பெங்களூர் ஆகியவை திகழ்கின்றன. இந்த 2 நகரங்களுக்கும் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக, ஐடி துறையைச் சார்ந்த பணியாளர்கள் ஏராளமானோர் வார இறுதிகள் தோறும் இரு நகரங்களுக்கும் சென்று திரும்புகின்றனர். தற்போது, சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆகிறது.

Route map of Chennai bengaluru expressway: All About Chennai Bangalore Expressway

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ. 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வழி விரைவுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. பெங்களூர் அருகே ஹோஸ்கோட் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை விரைவுச்சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 258 கிலோ மீட்டருக்கு அமைக்கப்படும் விரைவுச்சாலை வழித்தடத்தில் 17 மேம்பாலங்கள் உட்பட 160-க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைகின்றன.

இப்போது சென்னை - பெங்களூர் ஆகிய இரு நகரங்களுக்கும் இடையே பயணிக்க இரண்டு ரூட்கள் உள்ளன. ஒன்று 335 கி.மீ நீளமுள்ள பழைய மெட்ராஸ் நெடுஞ்சாலை. இது ஹோஸ்கோட், முல்பாகல், சித்தூர், ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, கோயம்பேடு வழியாகச் செல்கிறது.

மற்றொரு ரூட், 372 கி.மீ நீளமுள்ளது. இது பெங்களூர், எலக்ட்ரானிக் சிட்டி, சாந்தபுரா, ஓசூர், கிருஷ்ணகிரி, ஆம்பூர், வாணியம்பாடி, வாலாஜாபேட்டை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி மற்றும் சென்னை எனச் செல்கிறது.

இப்போது அமையவிருக்கும் எக்ஸ்பிரஸ்வே என்பது மூன்றாவது ரூட் 258 கி.மீ நீளம் உள்ளது. பெங்களூர் புறநகரான ஹோஸ்கோட்டில் தொடங்கும் இந்த எஸ்க்பிரஸ் ஹைவே, மாலூர், பங்கார்பேட்டை, கோலார் (கர்நாடகா), வெங்கடகிரிகோட்டை, பாலமனார், பங்காருபாலம், சித்தூர், (ஆந்திரா) அரக்கோணம், ராணிப்பேட்டை (தமிழ்நாடு) வழியாக சென்னையின் புறநகரான ஸ்ரீபெரும்புதூர் வரை இருக்கும். இந்தச் சாலை பெங்களூர் ரிங் ரோட்டுடன் இணைக்கப்படும். அதேபோல, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து உயர்மட்ட சாலையாக மதுரவாயலில் இணையும்.

சென்னை பெங்களூர் இடையே அதிவிரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஸ்ரீபெரும்புதூர் முதல் மதுரவாயல் வரை சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கப்பட உள்ளது.

பெங்களூர்-சென்னை விரைவுச்சாலை ஒசக்கோட்டை (ஹோஸ்கோட்) அருகே உள்ள குளத்தூர் கிராமத்தில் தொடங்கி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நிறைவடைகிறது. இதன் நீளம் 285 கி.மீ. இந்த சாலை கர்நாடக மாநிலத்தில் 77.23 கிலோ மீட்டரும், ஆந்திராவில் 91 கிலோ மீட்டரும், தமிழ்நாட்டில் 116.6 கிலோ மீட்டரும் அமைகிறது. இந்த சாலை திட்ட செலவில் மத்திய அரசு 40 சதவீதம், அரசு-தனியார் பங்களிப்பில் 60 சதவீதமும் நிதி திரட்டப்பட்டுள்ளது.

Route map of Chennai bengaluru expressway: All About Chennai Bangalore Expressway

நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது. Ground Granulated Blast Furnace Slag என்ற எஃகு உற்பத்தியின் போது பெறப்படும் துணை தயாரிப்பை இந்த சாலை பணிகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இது சாலைக்கு நீடித்த வலிமை அளிக்கும்.

ஆறு வழிச்சாலையாக பிரமாண்ட வடிவில் இந்த மேம்பால சாலை உருவாகிறது. ஒட்டுமொத்தமாக இந்த விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு வந்தால், இனி சென்னை - பெங்களூர் செல்ல 6-7 மணி நேரம் செலவாகாது. வெறும் 2 மணி நேரத்திலேயே பயண தூரத்தை கடக்கலாம். இந்நிலையில், இந்த அதிவிரைவுச்சாலை ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+