'நாம எந்த வம்பு தும்புக்கும் போறதுல்ல' சென்னை ஒயின்ஷாப்பில் இளைஞரை தேடி வந்த வம்பு.. என்ன நடந்தது?
சென்னை: 'நாம எந்த வம்பு தும்புக்கும் போறதுல்ல' என்று அமைதியாக டாஸ்மாக்கில் உள்ள கழிவறைக்கு போன இளைஞரை வம்பிழுத்த ரவுடிகள், அவரை பீர் பாட்டில் கொண்டு தாக்கி உள்ளனர். சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒயின்ஷாப்பில் இது நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் விநாயகம் , 21 வயதான இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தங்கி அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள செல்வம் பேக்கரி கடையில் பணியாற்றி வருகிறார்.
இவர் பணிபுரியும் கடையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அருகில் இருக்ககூடிய அரசு மதுபான கடையில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த மதுபான கடையில் மது அருந்தி விட்டு வந்த போதை ஆசாமிகள் விநாயகத்தை வீண் தகராறு செய்துள்ளனர்.

சரமாரி தாக்கு
வீண் தகராறு செய்தவர்களிடம் விநாயகம் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் இருவரும் விநாயகத்தை சரமாரியாக தாக்குகின்றனர். பின்னர் மதுபான பாரில் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பீர் பாட்டில்களை எடுத்து அவர் தலையிலே அடித்துள்ளனர். இதில் காயமுற்ற விநாயகம் மண்ணூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

சிசிடிவி காட்சி
இது குறித்து விநாயகம் அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் மாலை நடைப்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பீர் பாட்டில் தாக்குதல்
அதில் மதுபான பாரில் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பும் விநாயகத்தை போதை ஆசாமிகள் இருவரும் வீண் தகராறு செய்வதும் மஞ்சள் சட்டை அணிந்து உள்ள நபர் விநாயகத்தை அடித்து கீழே தள்ளுவதும் பின்னர் எதற்காக அடித்தாய் என விநாயகம் கேட்கும் பொழுது இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி பீர் பாட்டில்களால் தாக்கக்கூடிய காட்சிகளும் பதிவாகியுள்ளது.

படுகாயம் அடைந்தார்
முதல் பாட்டில் தலையில் படாமல் தப்ப அடுத்தது இரண்டு பாட்டில்களால் தலையில் அடித்து விநாயகத்தை ஓட ஓட அடிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மங்களாபுரத்தை சேர்ந்த நித்யவேல் மற்றும் அவனைது கூட்டாளி இருவரும் சேர்ந்து தாக்கியதும், நித்யா மீது திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர்.
-
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications