குடிகாரர்களுக்கும், ஓ பாசிட்டிவ் ரத்த வகைக்காரர்களுக்கும் கொரோனா வராது.. ரவுடி பேபி சூர்யா புரளி!
சென்னை: குடிகாரர்களுக்கு கொரோனா வராது என்றும் ஓ பாசிட்டிவ் ரத்த வகையாளர்களுக்கும் கொரோனா உள்பட எந்த நோயும் வராது என டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா புரளி கிளப்பி வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தினந்தோறும் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டி வருகிறது. நேற்றைய தினம் இந்த பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கொரோனாவிலிருந்து தப்ப தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்றும் முகக் கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் ஆகியவற்றை செய்தாலும் கொரோனாவிலிருந்து தப்பலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

காய்கறிகள்
மேலும் பழம், காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைத்துக் கொள்ளவும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அது போல் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா எளிதில் சென்று நுரையீரலை தாக்கும் என தெரிவிக்கிறார்கள்.

ரவுடி பேபி
இந்த நிலையில் கொரோனாவிலிருந்து தப்ப ரவுடி பேபி ஒரு ஐடியா கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், கொரோனா கொரோனா கொரோனானு நல்லா சாப்பிட்டுட்டு வாழறதை விட்டுட்டு ஏன் பயப்படுகிறீர்கள். நன்றாக மூக்கு முட்ட சாப்பிட்டால் கொரோனா வந்தாலும் தெம்பாக இருக்கும்.

கொரோனா
நல்லா சாப்பிடுவோர் யாருக்குமே கொரோனா அட்டாக் ஆகாது. முக்கியமாக குடிமகன்களுக்கும் குடிமகள்களுக்கும் கொரோனா பாதிப்பே வராது. எனது ரத்த வகை ஓ பாசிட்டிவ். இந்த ரத்த வகையாளர்களின் உடல் இரும்பு போல் இருக்கும் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

உண்மைக்குப் புறம்பான பேச்சு
இது போல் உண்மைக்குப் புறம்பாக சூர்யா பேசி வரும் வீடியோ வைரலாகி வருகிறது. எந்த மருத்துவராக இருந்தாலும் குடிப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளிட்ட போதை பழக்கங்களை கைவிடுங்கள் என்றுதான் கூறுவார்கள்.

ஊரடங்கு
டாஸ்மாக் கடைகளில் மக்கள் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதால்தான் அந்த கடைகள் ஊரடங்கு காலத்தில் மூடப்படுகிறது. ஆனால் குடித்தால் கொரோனா வரவே வராது என மக்களுக்கு தவறான தகவலைப் பரப்பும் ரவுடி பேபி சூர்யா பரப்புவது தவறு என்கிறார்கள் நெட்டிசன்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications