Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாம் சரவணனுக்கு நீதிமன்ற காவல்! பழிக்குப் பழியாக கொலை.. 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த ‘ஷாக்’ தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு ஜனவரி 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து பொதுவார்டில் உள்ள பாம் சரவணன் இன்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுகிறார்.

சென்னை புளியந்​தோப்பு வெங்​கடேசபுரம் பகுதியைச் சேர்ந்​தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). கொலை முயற்சிகளின் போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி காரியத்தை கச்சிதமாக முடிப்பதில் இவர் கைதேர்ந்தவர் என்பதால் பாம் சரவணன் என ரவுடிகள் வட்டாரத்தில் அழைக்கப்படுகிறார். பாம் சரவணன் "A ப்ளஸ்" ரவுடிகள் பட்டியலில் இருப்பவர். இவர் மீது 6 கொலை வழக்​கு​கள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட 26 வழக்​குகள் நிலுவையில் உள்ளன.

Chennai Police armstrong rowdy

கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலtஹ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவருமான தென்னரசு கடந்த 2016 ஆம் ஆண்டு, ரௌடி ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அந்த தென்னரசுவின் சகோதரர்தான் இந்த பாம் சரவணன்.

பாம் சரவணன் தலைமறைவான நிலை​யில் சென்னை போலீசார் பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து சரவணனை தேடி வந்தனர். தனது சகோதரர் தென்னரசு மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைகளுக்கு பழிவாங்க, பாம் சரவணன் தலைமறைவாக இருப்பதாகவும், அதற்காக ஸ்கெட்ச் போட்டுக் காத்திருப்பதாகவும் உளவுப்பிரிவு போலீசார், எச்சரிக்கை விடுத்ததையடுத்து போலீசார் கடந்த ஒரு மாதகாலமாக பாம் சரவணனை தீவிரமாக தேடி வந்தனர்.

சரவணன் ஆந்திரா​வில் இருப்​பதாக கிடைத்த தகவல் அடிப்​படை​யில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்​றனர். அங்கு சித்தூர் மாவட்டம் வரதப்​பாளையம் பகுதி​யில் ரவுடி பாம் சரவணனை போலீசார் துப்​பாக்கி முனை​யில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை​யின் புறநகர் பகுதி​யில் ரகசிய இடத்​தில் அவரிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை விசாரணைக்காக தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்கி விட்டு, நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓட பாம் சரவணன் முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். பாம் சரவணனிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாம் சரவணன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் காலில் குண்டு அகற்றப்பட்டு, அறுவை சிகிச்சை முடிந்து பொதுவார்டில் உள்ள பாம் சரவணன் இன்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுகிறார். இந்நிலையில், பாம் சரவணனுக்கு ஜனவரி 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, பாம் சரவணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் ஒன்றும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. கோயம்பேட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு சரித்திரப் பதிவேடு ரவுடி பன்னீர்செல்வம் காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் அவரைத் தேடி வந்தனர். ஆனாலும் அவரை தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. பன்னீர்செல்வம் மீது பாம் சரவணனின் அண்ணன் தென்னரசுவை கொலை செய்த வழக்கு உள்ளது.

இந்நிலையில், அண்ணனின் கொலைக்கு பழி தீர்க்க பன்னீர்செல்வத்தை கடத்தி, ஆந்திர எல்லையில் பாம் சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து எரித்துக் கொன்றது, பாம் சரவணன் அளித்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால், பன்னீர்செல்வம் காணாமல் போன வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+