சுரேஷின் தலையை காணவில்லை.. முள்ளுச் செடியில் கிடந்த உடல்.. தீவிர தேடுதலில் போலீஸ்
ரவுடியை தம்பதி வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்
Recommended Video
சென்னை: சுரேஷின் தலையை காணவில்லை.. முள்ளு செடியில் முண்டத்தை மீட்ட போலீசார், இது சம்பந்தமான தேடல், விசாரணையில் இறங்கி உள்ளனர்.
சென்னையை அடுத்த புழல் விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஒரு ரவுடி.. கிரிமினல் சுரேஷ் என்றால்தான் இந்த பகுதியில் தெரியும். 31 வயது!
ஆட்டோ ஓட்டிவந்தார், இருந்தாலும் சுற்றுவட்டார பகுதிகளில் நிறைய கேஸ்கள் இவர் மீது ஸ்டேஷனில் உள்ளன. இந்நிலையில், போன 14-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே போன சுரேஷ், அதுக்கப்புறம் திரும்பி வரவே இல்லை. இதனால் சுரேஷின் அம்மா கொரட்டூர் போலீசார் புகார் தரவும், அவரை தேடி வந்தனர்.

கள்ள உறவு
இது சம்பந்தமான விசாரணை நடந்தபோது, சுரேஷூக்கு பாடி கலைவாணர் நகரைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதன் காரணமாகவே கொலை நடந்திருக்கலாம் என்றும் விஷயம் வெளியே வந்தது. இது சம்பந்தமாக கார்த்திகா - ஜெயகொடி தம்பதியினரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

தப்பி ஓட்டம்
அப்போது, "சுரேஷ் எங்க வீட்டுக்கு அத்துமீறி நுழைஞ்சு வந்துவிட்டான்.. அதனால அவனை அடிச்சு உதைச்சு கட்டி போட்டோம்.. ரொம்ப அடிச்சிடவும் காயம் அதிகமாயிடுச்சு.. அதனால ஆஸ்பத்திரிக்கு ஒரு ஆட்டோவுல கொண்டு போனோம்.. அப்போ சுரேஷ் தப்பி ஓடிவிட்டான்" என்றனர்.

விசாரணை
ஆனாலும் தம்பதி சொன்ன இந்த கதையை போலீசார் நம்பவே இல்லை என்பதால், தங்கள் பாணி விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் கொலை செய்தோம் என்று ஒப்புக் கொண்டனர்.

முட்புதர்
"கள்ள உறவு வேண்டாம் என்று நல்லபடியாக பேசதான் சுரேஷை அழைத்தோம். ஆனால், வாக்குவாதம் முற்றிவிட்டது. அப்பதான் ஆத்திரம் அதிகமாகி சுரேசை வெட்டிக்கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை மட்டும் செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் அருகே முட்புதரில் வீசிவிட்டோம்.. தலையை வேறு எங்கியோ ஒரு ஒரு இடத்தில் வீசிவிட்டோம்" என்றனர்.

கைது
இதையடுத்து விளாங்காடுபாக்கத்துக்கு விரைந்து சென்ற போலீசார், முட்புதரில் அழுகிய நிலையில் கிடந்த சுரேசின் தலையில்லாத உடலை மீட்டனர். ஆனால் சுரேசின் தலையை காணவில்லை. அதை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications