“இந்திய ராணுவத்துக்கு ஒரு ராயல் சல்யூட்”.. ஆபரேஷன் சிந்தூர் அதிரடியை பாராட்டிய விஜய்!
சென்னை: இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு விஜய் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நள்ளிரவில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவாதிகளின் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு குறி வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய ராணுவத்திற்கு ஒரு ராயல் சல்யூட்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், "போராளிகளின் சண்டை தொடங்கி விட்டது. வந்த வேலை முடியும் வரை நிறுத்த வேண்டாம்" என்று கூறியுள்ளார். அதோடு, பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்துள்ள அவர், ஒட்டுமொத்த நாடும் அவருடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன், கடைசியாக அமரன் படத்தில் இந்திய ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் அமரன். இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து, "இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்" என்ற அமரன் படத்தின் டைலாக்கை குறிப்பிட்டு ஜெய்ஹிந்த் என பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
-
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம்












Click it and Unblock the Notifications