மாதம் ரூ.1500.. பயனுள்ள அஞ்சலக சிறுசேமிப்பு.. மத்திய அரசின் பெண்களுக்கான 4 சூப்பர் முதலீட்டு திட்டம்
சென்னை: பெண்களின் நலனிலும், முன்னேற்றத்திலும் ஆர்வம் கொண்ட மத்திய அரசு, பெண்களுக்காகவே துவங்கப்பட்டுள்ள சிறுசேமிப்பு திட்டடங்கள் என்னென்ன தெரியும்? கடனுதவி திட்டங்கள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவை பொறுத்தவரை, ஆண்களுக்கு சமமாக பெண்களும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், அனைத்து துறைகளிலும் பெண்களும் முன்னேற வேண்டும் என்பதில் மத்திய அரசு அதிக அளவிலான அக்கறையை காட்டி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், சுயதொழில் செய்து பெண்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, நிறைய சலுகைகளை வழங்கி வருகிறது... காரணம், போதுமான நிதிவசதி இல்லாத காரணத்தினால், எத்தனையோ பெண்களால் சுயமாக தொழில் தொடங்க முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு கை கொடுத்து உதவுவதற்காகவே கொண்டுவரப்பட்டதுதான் அன்னபூர்ணா யோஜனா திட்டம்.
உணவுப்பொருட்கள்: இந்த திட்டத்தின்கீழ், பெண்களை தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.சமையல் பாத்திரங்கள், சமையல் கருவிகள், உணவுப் பொருட்கள், உணவு மேஜை உள்ளிட்டவை வாங்குவதற்காக இந்த தொகையை பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்
இதுபோலவே, பெண்களின் ஆதரவை பெற்ற திட்டம் "பணியாளர் திட்டம்" ஆகும்... ஏழை பெண் வியாபாரிகளும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வியாபாரத்தில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு பணம் வழங்குகிறது..
கடனுதவி: இந்த கடனுதவி திட்டங்களை போல, பெண்களுக்காகவே 4 முதலீட்டுத் திட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.. மகளிருக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களின் நிதி சுதந்திரத்தை மேம்படுத்தவும் பல நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.. இதில், முக்கியமானது சுபத்ரா யோஜனா திட்டமாகும்.
ஒடிசா மாநிலத்தில் பெண்களிடையே நிதி சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த சுபத்ரா யோஜனா திட்டத்தை ஒடிசா அரசு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அறிவித்திருக்கிறது. 21 வயது முதல் 60 வயது வரையுள்ள தகுதியுள்ள பெண்களுக்கு வருடத்துக்கு ரூ.10,000, இரண்டு சம தவணைகளில் என 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.50,000 வழங்கப்படுகிறது.
ஆதரவற்ற பெண்கள்: அடுத்ததாக, மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா திட்டமாகும். மகாராஷ்டிரா அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருக்கும் இந்த திட்டமானது, பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.1,500 வழங்குகிறது. 21-65 வயதுடைய திருமணமான, விவாகரத்து செய்யப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் வழங்கப்படுகின்றன..
அடுத்ததாக, மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்.. கடந்த வருடம் துவங்கப்பட்ட இந்த சிறுசேமிப்பு திட்டம், பெண்களுக்கான சிறுசேமிப்பை ஊக்குவிக்கக்கூடியது.. இந்திய பெண் யாராக இருந்தாலும், இதில் கணக்கைப் பதிவுசெய்து முதலீடு செய்யலாம்..
இந்தத் திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் வரும் மார்ச் 2025 வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி செலவு: அடுத்ததாக, சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் மிக முக்கியமானது.. SSY என்று சொல்லக்கூடிய இந்த திட்டம் இளம் பெண்களின் கல்வி மற்றும் நலனுக்காகவும் சேமிப்பை மேம்படுத்துவதற்காகவும் கொண்டுவரப்பட்ட சேமிப்புத் திட்டமாகும். 10 வயது வரையிலான பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கணக்கை துவங்கலாம். அதிக வட்டி விகிதமும், வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச்சலுகையும் இந்த திட்டத்தில் உண்டு.












Click it and Unblock the Notifications