ரயிலில் தூங்கிய திமுக எம்எல்ஏ... ரூ.1 லட்சம், மோதிரத்தை அபேஸ் செய்த மர்ம நபர்கள்
சென்னை:ரயிலில் வந்த திமுக கொறடா சக்கரபாணியிடம் 1 லட்சம் ரூபாய், செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரையிலிருந்து சென்னைக்கு பாண்டியன் விரைவு ரயிலில் ஒட்டன்சத்திரம் எம்எல்ஏவும், திமுக கொறடாவுமான சக்கரபாணி பயணித்தார். பயணத்தின் போது தன்னுடன் 1 லட்சம் ரூபாய், தங்க மோதிரம், செல்போன் ஆகியவற்றை அவர் வைத்திருந்தார்.

ரயிலில் சக்கரபாணி அசந்து தூங்கியிருக்கிறார். பின்னர் தூக்கம் கலைந்து எழுந்து அவர் பார்த்த போது அவர் வைத்திருந்த பை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ந்தார்.
பையுடன் ஒரு லட்ச ரூபாய் பணம், தங்க மோதிரம் மற்றும் செல்போன் திருடப்பட்டது தெரிய வந்தது. தனது பணப்பை திருடு போனதை அறிந்து அங்குள்ள ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் வகுப்புப் பெட்டியில் பயணித்த சக்கரபாணியின் பொருட்கள் திருடுபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications