பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. கற்பூரத்தை ரயிலில் ஏற்றினால் ஜெயில் + ரூ.1000 அபராதம்! ரயில்வே அதிரடி
சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து முக்கிய அறிவுறுத்தல் ஒன்றையும் ரயில்வே நிர்வாகம் செய்திக்குறிப்பாக வெளியிட்டிருக்கிறது.
எளிதில் தீ பற்றக்கூடிய பட்டாசுகள், சமையல் எரிவாயு உருளை, அமிலம், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை ரயில்களில் எடுத்துச் செல்லக்கூடாது என்று ஏற்கனவே விதிமுறைகள் உள்ளன. எனினும், சபரிமலை சீசன் துவங்கி உள்ள நிலையில், சிறப்பு ரயில்களில் பக்தர்கள் சிலர், விளக்கு மற்றும் கற்பூரம் ஏற்றி வழிபடுவதாக தெரியவந்துள்ளது.

அதிரடி அறிவிப்பு: இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த செய்திக்குறிப்பில், "சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சபரிமலை செல்லும் பக்தர்கள் சிலர் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றி வைத்து பூஜை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
சபரிமலை பக்தர்கள் ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். தீ விபத்துகள். ரயில் பயனாளிகள் மற்றும் ரயில்வே சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கற்பூரம் அல்லது வேறு ஏதேனும் திறந்த சுடர்/நெருப்பை ஏற்றுவது ரயிலிலும், ரயில் நிலைய வளாகத்திலும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
தண்டனை: எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களுடன் பயணிப்பது அல்லது வைத்திருப்பது கண்டறியப்பட்டால், ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 67, 164 மற்றும் 165 இன் கீழ் தண்டனை விதிக்கப்படும்.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயில் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் நெருப்பு ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருள்களுடன் பயணிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
ரயில்வே ஊழியர்கள்: எனவே, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதையோ, எரியக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதையோ பயணிகள் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் ஒத்துழைக்க வேண்டும். யாரேனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், "130" என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் அல்லது பணியில் இருக்கும் எந்த ரயில்வே ஊழியர்களையும் அணுகலாம்.
அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, தடையற்ற மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்வதில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் உறுதிபூண்டுள்ளது. ரயில்வேயுடன் கைகோர்த்து, ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கற்பூரம் ஏற்றி எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications