ரூ.1000 உரிமைத்தொகை.. பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்! அமைச்சர் பெரியகருப்பன் கூறிய குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்த திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை என்பது அதிகரிக்கப்படும் எனும் குட்நியூஸை ‛ஒன் இந்தியா' தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டி மூலம் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
2021 சட்டசபை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டது. திமுகவின் ஆட்சி அமைந்தவுடன் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறியது.

தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுபேற்றார். இந்த சூழலில் அரசின் நிதி நிலைமை என்பது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதைடுத்து மகளிர் உரிமைத்தொகையை பெற சில தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
அந்த தகுதிகளின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த மாதம் 15ம் தேதி தமிழ்நாட்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் 1 கோடியே 6 லட்சம் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 உரிமைத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தகுதி இருந்தும் ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் முறையீடு செய்யலாம். இதனை செய்வதன் விடுபட்டுள்ள தகுதிவாய்ந்தவர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகையை அரசு வழங்க உள்ளது.
அதன்படி விடுபட்டவர்கள் தாலுகா அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஒன் இந்தியா தமிழுக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேர்க்காணல் அளித்தார். அதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதிலும் வருமாறு:
கேள்வி: முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மிகப்பெரிய திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் அனைவருக்கும் ரூ.1000 எனக்கூறிவிட்டு தற்போது ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மட்டும் என சுருக்கியுள்ளதாக பாஜக, அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனரே?
அமைச்சர் பெரியகருப்பன்: இந்த குற்றச்சாட்டை கூறுபவர்கள் யார் என்று கவனிக்க வேண்டும். நீங்களே கூறி இருக்கிறீர்கள். குற்றச்சாட்டை கூறுபவர் பாஜக, அதிமுக என்று. இவ்வளவு பெரிய நிதி நெருக்கடியில் முதல்வர் ஸ்டாலின் 2021ல் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது தமிழக அரசுக்கான கடன் சுமை என்பது 6 லட்சம் கோடி ரூபாய். அதேநேரத்தில் அன்றைய தினம் நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து 37 ஆயிரம் எனவும் சென்றது.
சாதாரண நிலையில் அவர் முதல் அமைச்சராக வரவில்லை. அசாத்தியமான ஒரு நெருக்கடியான நிலையில் தான் முதல் அமைச்சராக வந்தார். தனது மதிநுட்பத்தாலும், பல்வேறு வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்றும் கொரோனா நோயை கட்டுப்படுத்தினார். அதன்பிறகு கடந்த ஆட்சியாளர்கள் வாங்கி வைத்திருந்த 6 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையையும் சமாளித்துள்ளார்.
இந்த திட்டத்தில் அனைவருக்கும் என சொன்ன வார்த்தை எனக்கும் நினைவிருக்கிறது. ஆனால் மேட்டுக்குடி மக்கள் உள்ளனர். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ள மக்கள் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் ரூ.1000 சென்றால் அது பெரியதாக இருக்காது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் அனைத்து இல்லங்களுக்கும் சென்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது.
ஆனால் பலரும் தங்களுக்கு இந்த உரிமைத்தொகை தேவையில்லை. இது ஏழை, எளியோருக்கு பயன்படட்டும் என சிலரும், அதோடு சில விதிகள் விதிக்கப்பட்ட நிலையில் தங்களுக்கு பொருந்தாது எனவும் சிலர் இருந்தனர். விருப்ப மனுக்கள் என்பது அனைத்து இல்லங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டது. இந்த பணியை கூட்டுறவுத்துறை செய்தது. நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கப்பட்டது.
மேலும் இவ்வளவு நிதி நெருக்கடிக்கு நடுவேயும் கூட மனம் நோகாத வகையில் எதிர்பார்க்கக்கூடியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் முதல் அமைச்சரின் செயல் பாராட்டக்கூடிய வகையில் தான் உள்ளது. எதிர்க்கட்சியினர் சொல்வது போல் எதுவும் இல்லை. நாங்களும் மக்களுடன் பழகக்கூடியவர்கள் தான். அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து வருகின்றோம். கிராமங்களுக்கு செல்கிறோம். நகரங்களுக்கு செல்கிறோம். இந்த ஒரு வார காலமாக மகிழ்ச்சியாக உள்ளனர். எங்களுக்கு ரூ.1000 வந்துள்ளது என தாய்மார்கள் எங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். முதல் அமைச்சருக்கு நன்றி சொல்லுங்கள் என எங்களிடம் கூறுகின்றனர்.
ஆகவே இப்போதும் கூட தகுதி இருப்பின் ஒருவேளை விடுபட்டு இருந்தால் அவர்களுக்கும் கூட ரூ.1000 உரிமைத்தொகை கிடைப்பதற்கான முறையீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆக இந்த திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை என்பது 1 கோடியே 6 லட்சம் என்பது இறுதியல்ல. இன்னும் இந்த எண்ணிக்கை உயரக்கூடும்.

கேள்வி: நீங்கள் சொல்வதன் அடிப்படையில் பார்த்தால் நிதி நிலைமை காரணமாக 1 கோடியே 6 லட்சம் பயனாளர்கள் என வரையறைக்கப்பட்டுள்ளது. நிதி நிலைமை சரியான பிறகு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என எடுத்து கொள்ளலாமா?
அமைச்சர் பெரியகருப்பன்: நிச்சயமாக, முதல் அமைச்சரை பொறுத்தமட்டில் மனிதநேயமிக்கவர். மக்களுக்கு இவ்வளவு பெரிய வாக்குறுதியை கொடுத்து உள்ளோமே அதனை நிறைவேற்ற வேண்டுமே என்று பல காலக்கட்டங்களில் இதற்கான ஆய்வுக்கூட்டங்களை நடத்தினார். இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறி தற்போது செயல்படுத்தி உள்ளார். ஒருவேளை இப்படி கூட நடக்கலாம்.
சென்ற தேர்தல் அறிக்கையில் 2006-2011 ல் கலைஞர் திமுக தலைவராக இருந்து தேர்தலை சந்தித்தார். தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும் என்றார். அதனை அதிகாரிகள் கணக்கு எடுத்தனர். பிறகு மக்களிடம் கொண்டு சேர்த்தபோது தொலைக்காட்சி இல்லாத வீடுகளுக்கு தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது. இந்த சமயத்தில் நாங்கள் மக்களை சந்தித்தோம். அப்போது தொலைக்காட்சி பெட்டிகள் இருப்போரும் கூட நாங்களும் தான் ஓட்டளித்தோம்.
எங்களுக்கு கலைஞரின் பரிசு பொருள் தரமாட்டீர்களா? நாங்களும் அவருக்கு தானே ஓட்டளித்தோம். எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இருந்தாலும் கூட அவர் நினைவாக இதனை வீட்டில் வைத்து கொள்ள மாட்டோமா? என கேள்வி எழுப்பினர். பிறகு அமைச்சரவை கூட்டத்தில் இதனை பகிர்ந்தோம். இல்லாத இல்லங்களுக்கு தொலைக்காட்சி என்பது மட்டுமின்றி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத்துக்கும் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது. அதேபோல் நிதி நிலைமை சரியானால் அனைவருக்கும் இதனை முதல்வர் ஸ்டாலின் செய்வார் என பதிலளித்தார்.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்












Click it and Unblock the Notifications