பட்ஜெட்.. ரூ.1769 கோடி “கட்”! ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த ஆண்டை விட குறைந்த நிதி
இந்த ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1,769.76 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு என கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரூ.1,769 கோடி குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023 - 2024 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்காக ரூ.3,513 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்து இருக்கிறார்.

சமூக நீதி
"சமூக நீதியையும் சமத்துவம் நோக்கிய வளர்ச்சியையும் அடிப்படை கொள்கைகளாக கொண்டுள்ள இந்த அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது." எனப்பேசத்தொடங்கிய அவர் கீழ்காணும் திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்து இருக்கிறார்.

தனிச்சட்டம்
இந்த விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

புதிரை வண்ணார்கள்
இதனை ஏற்று, இத்துணைத் திட்டத்தின் செயல்பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு சிறப்புச் சட்டத்தை இந்த அரசு இயற்றும். உரிய ஆலோசனைக்குப் பின்னர், அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும். புதிரை வண்ணார்கள் நல வாரியத்திற்குப் புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், நலப் பணிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.

அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள்
நகர்ப்புரப் பகுதிகளிலும் ஊரகப்பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த 'அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்" நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.

குறைவான நிதி
அந்த துறைக்கு இம்முறை ரூ.3,513 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இந்த துறைக்காக ரூ.4,281,76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. அதை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1,769.76 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications