Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ரூ.18000 3 தவணைகளில் பெறுவது எப்படி?

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி இனிமேல் மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு ஏப்ரல் 1ம் தேதியான நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, பிக்மி' எண் பெற வேண்டும். அப்படி பதிவு செய்யும் கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும். 4-வது மாதத்துக்கு பிறகு, இரண்டாவது தவணையாக ரூ.2,000 வழங்கப்படும்.

Rs 18000 in 3 installments for pregnant women under Dr Muthulakshmi Reddy Scheme

மேலும், ரூ.2,000 மதிப்புள்ள பெட்டகங்கள் அரசு சார்பில் இரண்டு முறை வழங்கப்படும். அதன்பின்னர் அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த பிறகு, 3-வது தவணையாக ரூ.4,000, பேறு காலம் முடிந்து குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4,000, குழந்தைக்கு 9-வது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.14,000 ரொக்கம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். அதேபோல் மொத்தம் ரூ.4,000 மதிப்புள்ள பெட்டகம் வழங்கப்படும். அதாவது 14,000+4000 என அரசு வழங்கி வருகிறது

இந்த திட்டம் சரிவர அமல்படுத்தப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. ஒரு சிலருக்கு 4000 வரையிலும், ஒரு சிலருக்கு 8000 ஆயிரம் வரையிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிடைத்து வந்தது. ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிதியுதவி யாருக்கும் கிடைப்பது இல்லை என்றும், அதற்கு காரணம் கேட்டால், பதிவு செய்த பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் பொருந்தவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களை கூறி அதிகாரிகள் நிராகரிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதேநேரம் ஆதார் கார்டில் உள்ள பெயர் மற்றும் பதிவு செய்த பெயர் என இரண்டும் சரியாக இருப்போருக்கு மட்டும் உதவி தொகை கிடைப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேநேரம் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்தின்கீழ் இணையதளப் பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டதால் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கப்படவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு விளக்கமும் அளிக்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.11,702 கோடி நிதி 1.14 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே பிரதம மந்திரி மாத்ருவந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் சில மாற்றங்களை அரசு செய்திருக்கிறது. முன்பு கர்ப்பிணிகளுக்கு ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி ஏப்ரல் 1ம் தேதி முதல் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. கர்ப்பகாலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+