கேரளா திருவோணம் லாட்டரி.. தமிழருக்கு கிடைத்த பல கோடி ரூபாய்.. வரியே இல்லாமல் ஜாக்பாட்டை அள்ளிட்டாரே!
சென்னை: திருவோணம் பம்பர் லாட்டரி டிராவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கேரளாவைச் சேர்ந்தவர் அல்லாதவர் வெற்றி பெற்றுள்ளார். வயநாட்டின் சுல்தான் பத்தேரியில் விற்கப்பட்ட டிஜி 43422 என்ற டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி முதல் பரிசு கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.
முஹம்மது அல்தாப் என்பவர்தான் வெற்றி பெற்றவர் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரத்தைச் சேர்ந்த சக்கர வாகன மெக்கானிக் முஹம்மது அல்தாப்.

லாட்டரி: பத்தேரியில் என்ஜிஆர் லாட்டரி நடத்தி வரும் நாகராஜ், கடந்த வியாழக்கிழமை காலை அல்தாப்பைத் தொடர்பு கொண்டு அவர் வெற்றி பெற்றதை உறுதி செய்தார். அனைத்து வரி விலக்குகளுக்குப் பிறகு, அவர் கையில் தோராயமாக ரூ.13 கோடி கிடைக்கும்.
இது எல்லாம் கடவுள் அருளால் தான். 15 வருடங்களாக டிக்கெட் வாங்கி வருகிறேன், இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்று அல்தாப் கூறியுள்ளார்.
அரசுக்கு வருவாய்: வழக்கம் போல் இந்த முறையும் ஓணம் பம்பர் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்துள்ளது. ஓணம் பம்பரில் அதிக டிக்கெட் விற்க முடியாவிட்டாலும், அரசுக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே லாட்டரித் துறையினரால் ஓணம் பம்பராக 80 லட்சம் சீட்டுகள் அச்சிடப்பட்டன.
இதில் 71.43 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின. ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய். சீட்டு விற்பனை மூலம் மட்டும் லாட்டரி துறைக்கு ரூ.357.15 கோடி கிடைத்துள்ளது. இந்த முறை ஓணம் பம்பர் மொத்தப் பரிசுத் தொகை ரூ.125 கோடி. இதில் சுமார் 55 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளன. இது போக.. டிக்கெட் விற்பனை, கமிஷன் மற்றும் பங்கு மூலம் 112.5 கோடி அரசுக்கு வந்துள்ளது. அரசாங்கத்திற்கு 60.71 கோடி ஜிஎஸ்டி மூலம் கிடைத்துள்ளது.
கேரளா லாட்டரி துறையின் நிகர லாபமாக 38.76 கோடிகள் கிடைக்கும். வருமான வரி மற்றும் செஸ் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 24 கோடி ரூபாய் கிடைக்கும், ஆனால் அதில் சுமார் 10 கோடி ரூபாய் கேரளாவுக்கு மாநில பங்காக திரும்ப கிடைக்கும். மொத்தமாக கூட்டி கழித்து பார்த்தால்.. ஓணம் பம்பர் மூலம் மட்டுமே அரசின் கருவூலம் சுமார் ரூ.109.47 கோடியை நிரப்பி உள்ளது.
தமிழருக்கு ஜாக்பாட்: இதில் லாட்டரி விற்ற ஏஜென்ட் நாகராஜ் தமிழர். இவருக்கு 2.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இவருக்கு கமிஷன் வழங்கப்பட வேண்டும். அதன்படி வரி இல்லாமல் இவருக்கு இந்த 2.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
இதில் லாட்டரி முகவர்களுக்கு 10% கமிஷன் பிடித்தம் செய்யப்படும். முதல் பரிசு வென்றவர் ₹ 25 கோடியை வென்றதால் , ₹2.5 கோடி கழிக்கப்படும். பின்னர், 6.75 கோடி ரூபாய் அரசுக்கு செல்லும்.. அதாவது 30% மாநில வரி விதிக்கப்படும்.
இந்த விலக்குகளுக்குப் பிறகு, பரிசுத் தொகை ₹15.75 கோடியாகக் குறையும். ₹5 கோடிக்கு மேல் வருமானம் உள்ள வெற்றியாளர்களுக்கு வருமான வரியில் கூடுதலாக 37% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். இந்த வழக்கில், கூடுதல் கட்டணம் ₹2.49 கோடியாக சரியும். மேலும், மொத்த வரியில் (₹9.24 கோடி) 4% சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் கூடுதலாக ₹36,99,000 சேர்க்கப்படும்.
மொத்தத்தில், ₹25 கோடி பரிசு வென்றவர் தோராயமாக ₹12.11 கோடி deductionயை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், அவர்களுக்கு இறுதித் தொகை ₹12.88 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications