சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ 500 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு
சென்னை: சிங்கார சென்னை 2. O திட்டத்திற்காக ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சிங்கார சென்னை என்பது தலைநகர் சென்னையை அழகுப்படுத்தும் திட்டமாகும். 1996 இல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது அவர் டெல்லி, மும்பை ,கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையை அழகுப்படுத்த சிங்கார சென்னை திட்டத்தை கொண்டு வந்தார். இந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஸ்டாலினின் கனவு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து தற்போது முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில் புதுபொலிவுடன் சிங்கார சென்னை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிக்கு உத்தரவிட்டார். அதன்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் புதிய சாலைகள் போடுவது, பாலங்கள் கட்டுவது, சுவரொட்டிகளை நீக்கி சுத்தம் செய்யும பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடலோர பூங்காக்கள்
அது போல் புதிய பூங்காக்கள் அமைப்பது, கடலோர பூங்காக்கள் அமைப்பது , சென்னை கடற்கரைகளை சுற்றுலாத் தலமாக மாற்றும் ப்ராஜக்ட் ப்ளூ என்ற திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. முதல் கட்டமாக சென்னையை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Recommended Video

கொசுக்கள்
நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு கொசுக்களை ஒழிக்க டிரோன் மூல்ம மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அது போல் வடகிழக்கு பருவமழையின் போது சாலைகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் நீர்நிலைகள், மழை நீர் கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கப்படும் என கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இணையத்தின் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அது போல் சாலை பணிகள் இருந்தால் அதற்கேற்ப போக்குவரத்தை மாற்றி கொள்ளும் வகையில் இணையதளத்தில் மாநகராட்சி சார்பில் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications