தாம்பரம் ரோட்டில் ஒரே பரபரப்பு.. "ரூ.535 கோடி"யுடன் நின்ற லாரி.. மொத்தமும் புது நோட்டுகள்.. என்னாச்சு
சென்னை: ரூ.535 கோடி பணத்துடன் சென்ற லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.. நேற்று மாலை என்ன நடந்தது தாம்பரத்தில்?
ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லப்படுவதும், மற்ற வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு பணத்தை தினமும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விழுப்புரத்தில் உள்ள வங்கிக்கு பணத்தை கொண்டும் செல்லும் பணி நேற்று நடைபெற்றது.

கண்டெயினர் லாரி: சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து, ரூ. 535 கோடி பணத்துடன், இரண்டு "ஈச்சர்" கன்டெய்னர் லாரிகள் நேற்று மதியம் புறப்பட்டன.. நேற்று மாலை, கண்டெயினர் லாரி, சென்னை தாம்பரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதற்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தின் அடிப்பகுதியில் இருந்து திடீரென புகை எழுந்துள்ளது.
அப்போதுதான், அந்த கண்டெயினர் ரிப்பேர் ஆகிவிட்டது தெரியவந்தது.. உடனடியாக சித்த மருத்துவமனை எதிரே கண்டெயினர் லாரி நிறுத்தப்பட்டது. அத்துடன், தாம்பரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது..
விழுப்புரம் : போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தார்கள்.. அவர்களுடன் மெக்கானிக் என்ஜினியர்களும் வரவழைக்கப்பட்டனர்.. இழுவை வண்டி மூலம் அங்கிருந்து, சித்தா மருத்துவமனை வளாகத்திற்கு கண்டெயினர் லாரி கொண்டு செல்லப்பட்டது.. வாகனத்தை சரி செய்த பிறகு தொடர்ந்து, பணம் விழுப்புரத்துக்கு கொண்டு செல்லப்படுமா அல்லது மறுபடியும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்படுமா என்பது குறித்து, மேலிட உத்தரவுக்கு பிறகுதான் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் அப்போது சொல்லப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.. பாதுகாப்பு கருதி, 2 வாகனங்களையும், அருகே உள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்திற்குள் எடுத்து சென்று நிறுத்தினர்.. அத்துடன், சித்த மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, யாரும் உள்ளே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. 17 போலீசார், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.. உடனடியாக கண்டெயினர் பழுதுபார்க்கும் பணியும் ஆரம்பமானது.
கண்டெயினர் லாரி: ஆனால், பழுதை சரிசெய்யவே முடியவில்லை.. அதனால், 'ரெக்கவரி டிரக்' வாகனம் வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் பழுதடைந்த கன்டெய்னர் லாரிகள் இரண்டையும் அதில் ஏற்றி, மறுபடியும் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கே திருப்பி அனுப்பினார்கள் அதிகாரிகள்..
திடீரென பலகோடி ரூபாய் பணத்தோடு வாகனம் பழுதாகி நடுரோட்டில் நின்றதும், வாகனத்திற்கு அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதாலும் அந்த பகுதியே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.. அந்த 2 கன்டெய்னரில் இருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் புதிதாக அச்சிடப்பட்டவையாம்..!!












Click it and Unblock the Notifications