ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு!
சென்னை: ரூ.8,000 மதிப்பு கொண்ட டோக்கன் கொடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக திமுக கொடுத்திருந்தது. இந்நிலையில், மாதிரி கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டு வாக்கு கேட்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கூப்பன் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
ரூ.8,000 டோக்கனால் எதிர்க்கட்சிகள் ரொம்பவும் டென்ஷன் ஆகியிருக்கின்றன. இதை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால், தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்றே டோக்கன் விநியோகிக்கப்படுவதாக திமுகவினர் கூறியிருந்தனர்.

முன் அனுமதி
கூப்பனை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த திமுக, தேர்தல் ஆணையத்திடமிருந்து அனுமதி வாங்கியிருக்கிறது. இதற்கான ஆவணங்களும் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டிருந்தன. கடந்த ஏப். 1ம் தேதி இதற்காக அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்கிற வாக்கியங்களை கொண்ட ரூ.8000 கூப்பன் போன்ற இரண்டு போஸ்டர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த போஸ்டர்களைதான் டோக்கன் மாதிரி கொடுத்து வாக்கு கேட்கப்பட்டிருக்கிறது. எனவே இது தேர்தல் விதிமீறல் கணக்கில் வராது என்று திமுகவினர் கூறி வந்தனர்.
மறுத்த தேர்தல் ஆணையம்
இருப்பினும், இது விதிமீறல் கணக்கில்தான் வரும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அதாவது, "மேற்கூறிய சான்றிதழ் மின்னணு ஊடகங்களில் (Electronic media) உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இச்சான்றிதழ் அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள், குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள் (pamphlets) அல்லது கைப்பிரதிகள் (handbills) ஆகியவற்றிற்கு பொருந்தாது.
தலைமை தேர்தல் ஆணையர்
அத்தகைய அச்சிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 127A மற்றும் நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) ஆகியவற்றைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, மேற்கண்ட வகையில் வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானதும் தவறாக வழிநடத்தக் கூடியதுமானதாகும்" என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் தனது x தளத்தில் பதிவிட்டிருந்தார்.
வழக்கு பாயும்
இதனை தொடர்ந்து, தற்போது நடவடிக்கை குறித்து எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ரூ.8,000 கூப்பன் விநியோகிக்கப்பட்டால், அது பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் கூப்பனை அச்சடிப்பது, விநியோகிப்பது கூடாது. நடத்தை விதிகளை மீறி கூப்பன்களை வழங்கினால் 127வது மக்கள் பிரதிநிதித்துவ சடத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருகிறது.












Click it and Unblock the Notifications