கோட்டையில் ஸ்டாலின்.. அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றும் ஆர்.எஸ்.பாரதி.. திமுக வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை : திமுகவின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நாளை தேசியக்கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
திமுகவின் அமைப்புச் செயலாளராக இருப்பவர்கள் தேசியக் கொடி ஏற்றி வந்தனர். ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றினார்.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றிய நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடியேற்றினார்.

திமுக தலைமை அலுவலகம்
திமுகவின் தலைமை அலுவலகமான, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி, ஆண்டுதோறும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவின்படி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

அமைப்புச் செயலாளர்கள்
அப்போது திமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றினார். ஓரிரு முறைகள் தவிர, திமுகவின் அமைப்புச் செயலாளர்களாக உள்ளவர்களே தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

ஸ்டாலின் ஏற்றினார்
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தேசியக் கொடியை ஏற்றிய பின், மு.க.ஸ்டாலின் அதற்கு வணக்கம் செலுத்தாமல் சென்றதாக வெளியான வீடியோவைச் சுட்டிக்காட்டி அதிமுக சார்பில் தேசியக்கொடி ஏற்றும் விதிமுறையை திமுக தலைவர் மீறியதாக ப்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.

கோட்டையில் ஸ்டாலின்
கடந்த ஆண்டு, சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடியேற்றினார். இந்த ஆண்டும் நாளை சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்ற இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி
75வது சுதந்திர தினத்தையொட்டி நாளை அண்ணா அறிவாலய வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளது. இந்த முறையும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாட்டின் விடுதலை திருநாளினையொட்டி, நாளை கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் தி.மு.க தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளது.
Recommended Video

திமுக அறிவிப்பு
காலை சரியாக 8 மணிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேசியக் கொடி ஏற்றி வைக்கிறார். இதில், சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு












Click it and Unblock the Notifications