Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகரீகம் கருதி அமைதியா இருக்கோம்.. ஆர்எஸ் பாரதி நாக்கை அடக்கி பேசனும்.. கொதித்த நாராயணன் திருப்பதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தி பேசிய ஆர்.எஸ் பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வீணாய் பிறந்து வீணராய் விளங்கும் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலையை ஆணாய் பிறந்து வீணாய் போனவன் என்று பேசுவதா? என பாஜகவின் நாரயணன் திருப்பதி சாடியுள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்து பேசினார். அதாவது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகவும், தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும் விமர்சித்தார்.

 RS Bharati should apologize for insulting the people of Nagaland; BJPs Narayanan Tirupati

மேலும், நாகாலாந்திலே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நடந்தது என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டியடித்தனர். தப்பா நினைத்துக்கொள்ளக்கூடாது, ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், அவர்களே அங்கு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை அனுப்பிவிட்டார்கள், அப்போது உப்பு போட்டு திண்ணும் தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம் என ஆர்.எஸ் பாரதி ஆவேசமாக பேசினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆர்.எஸ் பாரதியின் இந்த பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியும் நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தி பேசிய ஆர்.எஸ் பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக நாரயணன் திருப்பதி கூறியதாவது:- நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தி பேசிய ஆர்.எஸ் பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும்.

வீணாய் பிறந்து வீணராய் விளங்கும் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலையை ஆணாய் பிறந்து வீணாய் போனவன் என்று பேசுவதா? நாக்கை அடக்கி பேச வேண்டும் ஆர் எஸ் பாரதி. பிரதமரும், எங்களின் தலைவருமான நரேந்திர மோடி அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து பேசுவது பண்பாடாகாது என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆர்.எஸ். பாரதிக்கு எடுத்துரைக்க வேண்டும்.

அதிகாரம் நிலையானது அல்ல: ஒரு வினைக்கு எதிர்வினையாற்ற ஒரு நொடி போதாது. ஆனால், அரசியல் நாகரீகம் கருதி அமைதி காக்கிறோம். இனியும் அநாகரீகமாக எங்கள் தலைவர்கள் குறித்து பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. நாகரீகமான, பண்பாட்டு அரசியலை பின்பற்றுவது தான் வாக்களித்த மக்களுக்கு நீங்கள் ஆற்றும் கடமை. அதை விடுத்து, மலிவு அரசியலை முன்னெடுத்து, தரக்குறைவான பேச்சுகளை மக்கள் மத்தியில் பேசுவது முறையற்றது என்பது ஆர் எஸ் பாரதி போன்ற மூன்றாம் தர பேச்சாளர்களுக்கு புரியாமல் இருக்கலாம்.

ஆனால், பொறுப்பான தமிழக முதலமைச்சர் பொறுப்பில் உள்ள முக ஸ்டலின் அவர்களுக்கு புரியுமா என்பதே புதிர். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட முதலமைச்சர் கண்ணியத்தை கடைபிடிக்க தன் கட்சியினருக்கு அறிவுறுத்துவாரா அல்லது பதவிக்காக, ஆட்சி அதிகாரத்திற்கான அராஜக, அநாகரீக போக்கை தி மு கவினர் தொடர அனுமதிப்பாரா? அதிகாரம் நிலையானது அல்ல என்பதை முதல்வர் உணர்வாரா?. இவ்வாறு அவர் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+