எடப்பாடியை தவிர எல்லாரும் எங்களிடம் வந்துவிடுவார்கள் – சஸ்பென்ஸ் வைக்கும் ஆர் எஸ் பாரதி
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கியது, தேமுதிகவை கூட்டணிக்குள் இழுத்தது போன்ற நகர்வுகளால் திமுக களத்தில் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. இந்நிலையில் போகிற போக்கை பார்த்தால் எடப்பாடியை தவிர மற்ற அனைவரும் எங்களுடன் வந்துவிடுவார்கள் என்று ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார் [RS Bharthi].
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "போகிற போக்கை பார்த்தால் எடப்பாடி பழனிசாமியை தவிர மற்ற எல்லோரும் வந்துவிடுவார்கள் என்று தெரிகிறது. எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் காவி உடை அணிய தயாராகிவிட்டனர். அவர் பாஜகவிடம் மொத்தமாக சரண்டராகிவிட்டார். அவரைத் தவிர எல்லோருமே இங்கு வந்துவிடுவார்கள்.

திமுகவின் கூட்டணி கொள்கை
அனைவரும் திமுகவைத்தான் நம்ப வேண்டும் என்கிற நிலை வந்துள்ளது. மக்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். நாங்கள் இப்போது மட்டும் மாநில சுயாட்சி பற்றி பேசவில்லை. பாஜகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்த பிறகு ஒப்பந்தம் போட்டு பல கோரிக்கைகளை தலைவர் கருணாநிதி வைத்திருந்தார். அவர் இருந்தவரை ராமர் கோயில் கட்ட வாஜ்பாய் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாநில சுயாட்சி
2 கட்சிகளுக்கும் இருந்த புரிந்தணர்வில் தான் நாங்கள் ஒன்றிய அரசை இயக்கினோம். அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டதால் தான் அவர்களின் ஆட்சி அப்போது 5 வருடங்களை முழுமையாக கடந்தது. இந்திரா காந்தியை ஆதரித்தாலும், வாஜ்பாயை ஆதரித்தாலும், மன்மோகன் சிங்கை ஆதரித்தாலும் எங்களின் அடிப்படை கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, மாநில சுயாட்சியை ஏற்று அதுகுறித்து ஒவ்வொரு முறையும் வலியுறுத்தியுள்ளோம்.
பேச்சுவார்த்தைக் குழு
மன்மோகன் சிங் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு ரூ.56,000 கோடி நிதி கொடுத்தார். இது இந்தியாவிலேயே அதிகம். அதன் காரணமாக தான் எல்லா பகுதிகளுக்கும் எளிதில் சென்று வர முடிகிறது. இதற்கான உள்கட்டமைப்பு திமுக - காங்கிரஸ் கூட்டணியின், டிஆர் பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது வளர்ச்சி ஏற்பட்டது. திமுக பேச்சுவார்த்தை குழு தொடங்கிவிட்டது. யாருடன் எப்போது பேச வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications