Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இல்லத்தரசிகளுக்கு குஷி.. ரூ.1000 உரிமைத் தொகை விடுங்க.. அதென்ன 1,30,000? செல்வப்பெருந்தகை பலே கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸின் தேர்தல் அறிக்கையானது, மிகுந்த கவனத்தை பெற்று வரும்நிலையில், தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தரக்கூடிய தகவல், தன்னுடைய பிரச்சாரத்தின்போது வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.. அனைத்து கட்சிகளையும் இந்த தேர்தல் அறிக்கை கவனிக்க வைத்து வருகிறது.. குறிப்பாக, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான நீதி, சமூக நீதி ஆகிய 5 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது..

rs1 20 000 in Bank Account and Selvaperunthagai says about Congress Manifesto with rs1000 Magalir Urimai Thogai

நீதியின் 5 தூண்களின் மீது எழுப்பப்பட்ட நியாயப்பத்திரம் என்ற பெயரிலேயே தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. மொத்தம் 25 வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் தரப்பட்டுள்ளன. இந்த தேர்தல் அறிக்கையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் பழுத்த அனுபவம் பளிச்சிடுவதாகவும் கூறப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தி: மிகப்பெரிய திருப்பத்தை, தேர்தலில் இந்த தேர்தல் அறிக்கை தங்களுக்கு பெற்றுத்தரும் என்று காங்கிரஸ் கட்சியும் நம்புகிறது. அதனால்தான், "தேர்தல் அறிக்கை குறித்த உங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது, என்ன செய்யவில்லை என்பதை சொல்லுங்கள்" என்று ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டு, நாட்டு மக்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை போட்டுள்ள கணக்கு ஒன்று தமிழக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

செல்வப்பெருந்தகை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த், விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து செல்வபெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசியபோது, நாட்டிற்கு தேவை ஜனநாயகமா, சர்வாதிகாரமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தேர்தல் இது. இந்த நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த அணி ஒருபக்கம். நாட்டிற்கு துரோகம் செய்த அணி மறுபக்கம். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

வாக்குறுதிகள்: முஅப்போது பேசியபோது, நாட்டிற்கு தேவை ஜனநாயகமா, சர்வாதிகாரமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தேர்தல் இது. இந்த நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த அணி ஒருபக்கம். நாட்டிற்கு துரோகம் செய்த அணி மறுபக்கம். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.ல்வர் ஸ்டாலின் இந்த 2 வருடங்களில் தந்த வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை நிறைவேற்றி விட்டார்.. மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம், பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம், மகளிர் உரிமைத்தொகை என தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். இவை தவிர இல்லந்தோறும் கல்வி, மக்களைத்தேடி மருத்துவம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

காங்கிரஸ் மிகப்பெரிய பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுப்போம் என்று தெரிவித்திருக்கிறது.. இதன்மூலம் தமிழக அரசு வழங்கும் தொகையுடன் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் வருடத்துக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரம் கிடைக்கும்" என்றார் செல்வப்பெருந்தகை.

புரட்சிகரமான அறிவிப்பு: இதுஒருபுறமிருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த விவாதங்கள் இந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் எழுந்துவருகின்றன.. புரட்சிகரமான அறிவிப்பு என்று விசிக தலைவர் திருமாவளவன் போன்றோர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.. "ஏற்கெனவே முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பிலான விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.. எனவே, வருடத்துக்கு ரூ.1 லட்சம் வழங்குவது என்ற திட்டங்களை செயல்படுத்த முடியும்.. ஆனாலும், சில விஷயங்களை காங்கிரஸ் தவறவிட்டுள்ளது.

கல்வி: குறிப்பாக, கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுவது, புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்யாமல் அதை மறு ஆய்வுக்கு உட்படுத்துவோம் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விரோத சட்டங்களான உஃபா உள்ளிட்ட சட்டங்களை ரத்து செய்வோம் என காங்கிரஸ் தெரிவிக்காதது ஏன்?" 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிலையில், அக்கட்சியினர் இணைந்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் ப்ரியன் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+