ரூ.1000 கோடி டைரக்டரை "காலி" செய்த நடிகர்.. பழைய சேரன் இப்ப வரணும்.. அப்ப புரியும் எல்லாம்: பிரபலம்
சென்னை: தயாரிப்பாளர்கள்தான் இப்போது மாற வேண்டியிருக்கிறது.. 150, 200 கோடிகளை கொட்டி பெரிய நடிகர்களை வைத்தே படம் பண்ண நினைக்கிறார்கள்.. கடந்த ஒரு வருடத்தில் பெரிய ஹீரோக்களை வைத்து, எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாருமே நஷ்டமடைந்துள்ளனர்.. பெரிய பட்ஜெட்டில் பெரிய ஹீரோவை வைத்து, பெரிய நஷ்டத்தை சந்திப்பதை காட்டிலும், சேரன் போன்றோரை வைத்து சின்ன படமாக எடுக்கலாமே.. நஷ்டமானாலும் சிறிய அளவில்தானே வரும்? என்று மூத்த பத்திரிகையாளர் சுபைர் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சேரன் ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "நான் படம் எடுக்காமல் இருக்கிறேன் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், தயாரிப்பாளர்கள்தான் விருப்பப்படவில்லை. இவர் மூத்த இயக்குனர், நமக்கு ஏற்றார் போல இருப்பாரா? என நினைக்கிறார்கள். இப்போதைக்கு பீக்கில் உள்ளவரை வைத்தே படம் எடுக்க நினைக்கிறார்கள்.

நான் படம் எடுக்க தெரியாதா இயக்குனரா? பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறேன், 4 தேசிய விருதை வாங்கி இருக்கிறேன். எனக்கு ஏன் இந்த நிலைமை? எந்த இடத்தில் நான் தவறு செய்தேன்? ஏன், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் நம்பிக்கை கொடுத்துவிட்டு பின் வாங்குகிறார்கள்" என்றெல்லாம் ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.
கொண்டாட வேண்டியவர் சேரன்
இந்நிலையில், Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சுபைர் பேட்டி தந்துள்ளார்.. "1000 கோடி இயக்குனர் தெருகோடியில் நடிகர் என்ற தலைப்பில்" வெளியான அந்த பேட்டியில், பல்வேறு விஷயங்களை சுபைர் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
சுபைர் பேசும்போது, "சேரனை பொறுத்தவரை உணர்வுப்பூர்வமான இயக்குனர்.. தமிழ் சினிமா அவரை கொண்டாட தவறிவிட்டதோ? என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், அவரது தவமாய் தவமிருந்து, தேசிய கீதம் , பொற்காலம் போன்ற படங்கள் எல்லாம் காவியங்கள் என்றே சொல்லாம். மனித உணர்வுகளை கொட்டி அந்த படங்களை எடுத்திருப்பார்..
கலைஞர் பாராட்டு
கேஎஸ் ரவிக்குமாரின் உதவியாளராக இருந்தவர்.. பல போராட்டங்களுக்கு பிறகு பாரதி கண்ணம்மா படத்தை முதன்முதலாக இயக்கினார்.. அந்த படத்தின் கிளைமேக்ஸ் சென்ட்டிமென்ட்டாக இருந்தது..
அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் படத்தை பார்த்தார். அவருக்கு படம் மிகவும் பிடித்து போயிற்று.. "சாதி வெறிக்கு ஒரு சம்மட்டி அடி - பாரதி கண்ணம்மா, தமிழ் சினிமாவின் பொக்கிஷம்" என்று ஒரு கடிதம் எழுதினார் கலைஞர்.. இந்த கடிதம் மறுநாளே பத்திரிகைகளில் வெளியானது, அப்போதுமுதல் கவனிக்கப்படக்கூடிய இயக்குனராக உயர்ந்தார்.
மெசேஜ் சொல்லும் இயக்குனர்
இப்படியே பல வெற்றிமேல் வெற்றியாக படங்களை தந்தார்.. சென்சிடிவ் டைரக்டராக வலம் வந்தார்.. ஃபீல் குட் மூவி டைரக்டராக வலம் வந்தார்.. மெசேஜ் சொல்லக்கூடிய டைரக்டராகவும், சமூக அக்கறை கொண்ட டைரக்டராகவும் வலம் வந்தார் சேரன். சொந்த படம் எடுத்து நஷ்டம் அடைந்துவிடடார்.. பொருளாதார சிக்கலுக்கும் ஆளானார்..
இதைத்தான் சமீபத்தில் மனம் நொந்து பேட்டியில் சொல்லியிருந்தார் சேரன்.. இங்கு காமெடி படங்கள் எடுப்பது ஈஸி.. ஆனால், மனிதனை அழ வைப்பது கடினம்..உணர்ச்சிகளை காகிதத்தில் கதையாக எழுதி, அதை படமாக எடுத்து, அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து, அதை தியேட்டரில் பார்த்து மக்களை அழ வைப்பது என்பது மிகவும் கடினமான வேலை.. சவாலான பணியும்கூட.. அப்படி உணர்வுப்பூர்வமாக படங்களை எடுப்பவர்கள் இன்று குறைவு.- அதில் ஒருவர்தான் சேரன்..
பொருளாதார சிக்கல்கள்
தன்னுடைய கடன் மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சென்று வந்தார்.. தன்னுடைய கடனிலிருந்து வெளிவந்திருப்பார் என்றும் தெரிகிறது. ஆனால், அவருக்கு தற்போதுவரை ஒரு படத்தை எப்படியாவது இயக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார்.
இன்றைய பல்ஸை பிடித்து நிச்சயம் படம் பண்ணக்கூடிய டைரக்டர்தான் சேரன்.. ஆனால், இதுதான் இன்று அப்டேட் என்று நினைத்து கொண்டு படம் எடுத்துவிடக்கூடாது.. பழைய சேரனாகவே வந்து படத்தால் மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்..
டைரக்டர்கள் தடுமாற்றம்
பொதுவாக, நடுத்தர மற்றும் வயதான டைரக்டர்களுக்கு வரும் தடுமாற்றம் என்னவென்றால், "நாம அப்டேட்டாக இல்லையோ? லோகேஷ் கனகராஜ் மாதிரி எடுத்தால்தான் ஓடுமோ?" என்று நினைத்து கொள்கிறார்கள். பாண்டவர் பூமி ஆட்டோகிராப் படங்களை இன்றும் மக்கள் ரசிக்கிறார்கள்..
இதில், தயாரிப்பாளர்கள், வயதான டைரக்டர், பிசினஸ் ஆகாது என்றெல்லாம் நினைத்து தயங்கக்கூடாது. சேரனை வைத்து ஒரு படம் எடுத்தால்தான் அவர்களுக்கும் புரியும்.
ஹாலிவுட்டில் வயது ஏறஏறத்தான் இயக்குனர்களுக்கு மவுசு கூடும்.. கலைஞர்கள் மிகவும் சென்சிடிவ் ஆனவர்கள்.. அதில் சேரன் சற்று கூடுதலாக உள்ளார்.. அதனால்தான்,தன்னுடைய படங்களை விமர்சித்தால் அவரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.. இத்தனை வருடம் கழித்து சேரனை பேசக்காரணம், அப்படிப்பட்ட படைப்புகளை தந்திருக்கிறார்..
மாறுவார்களா தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர்கள்தான் இப்போது மாற வேண்டியிருக்கிறது.. 150, 200 கோடிகளை கொட்டி பெரிய நடிகர்களை வைத்தே படம் பண்ண நினைக்கிறார்கள்..
கடந்த ஒரு வருடத்தில் பெரிய ஹீரோக்களை வைத்து, எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாருமே நஷ்டமடைந்துள்ளனர்.. பெரிய பட்ஜெட்டில் பெரிய ஹீரோவை வைத்து, பெரிய நஷ்டத்தை சந்திப்பதை காட்டிலும், சேரனை வைத்து சின்ன படமாக எடுக்கலாமே.. நஷ்டமானாலும் சிறிய அளவில்தானே வரும்? என்றெல்லாம் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications