அக்கவுண்ட்டில் ரூ.1000 வரலயா? இதோ வருதாம்.. தமிழக அரசு மாஸ் ஏற்பாடு.. ஆமா, இப்படி ஒரு சிக்கல் இருக்கே
சென்னை: மகளிர் உரிமைத்தொகையில் இன்னொரு சிறப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பானது, பெரும் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.
வாக்குறுதியில் சொல்லியிருந்ததை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார்.. கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை, கடந்த 15-ந் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

உரிமைத்தொகை: இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.1,000, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனிடையே, உரிமைத்தொகை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் கலெக்டர் அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் தற்போது செயல்படவும் தொடங்கிவிட்டன. திரண்டு வந்த பொதுமக்களிடம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு விவரங்கள் மூலம் பயனாளிகளின் விண்ணப்ப நிலை குறித்தும், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்களும் பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டன.. ஒருவேளை, பயனாளிகள் உரிமைத்தொகை பெற தகுதியுடையவர்கள் என்று கருதும் பட்சத்தில் அவர்களை இ-சேவை மையங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.
வாழ்த்து செய்தி: இதனிடையே, பணம் செலுத்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு பணம் சென்று சேரவில்லை... ஆனால் அவர்கள் இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வரிடமிருந்து வாழ்த்து செய்தி வந்திருக்கிறது.. இதனால் பணம் வராத பெண்களுக்கு குழப்பம் வந்துவிட்டது.
இந்த தகவல் தமிழக அரசுக்கு தெரிந்த நிலையில் குறிப்பிட்ட அந்த வங்கி கணக்குகளில், பயனாளிகளின் ஆதாரங்களை இணைக்கப்படாததால் அந்த கணக்குகள் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை ஆதார் எண் இணைக்குமாறு வங்கித்தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உடனடியாக பணம் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆதார் நம்பர்: அதன்படி ஆதார் எண் இணைக்கப்படாத பயனாளிகளுக்கு அஞ்சல் துறை "மணியார்டர்" மூலமாக ஓரிரு நாட்களில் பணம் அனுப்பி வைக்க போகிறார்களாம்.. இந்த தகவல் அரசு தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் கிடைக்கவில்லையே என்று குழப்பத்திலும், ஏமாற்றத்திலும் இருந்த பெண்கள், அரசின் இந்த மணியார்டர் நடவடிக்கையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு குழப்பம் முளைத்தள்ளது.. அதாவது, உரிமைத் தொகை கிடைக்கப்பெறாதவர்கள், தங்களுக்கு மெசேஜ் வந்த நாளில் இருந்து, 30 நாட்களுக்குள், இ-சேவை மையம் வழியே, மேல் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த குழப்பம்: அதன்படியே, விண்ணப்பதாரர்கள் பலருக்கு, "உங்கள் விண்ணப்பம் கள ஆய்வில் உள்ளது" என்று மெசேஜ் வந்துள்ளதாம்.. விண்ணப்பம் கள ஆய்வில் இருப்பதாக, மெசேஜ் வந்திருப்பது, விண்ணப்பதாரர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறதாம். அப்படியானால், இவர்களும் மேல் முறையீடு செய்ய வேண்டுமா? அல்லது உரிமைத்தொகை வரும் என்று காத்திருக்க வேண்டுமா? என்பது தெரியாமல் குழம்பி போயிருக்கிறார்களாம். இதற்கும் அரசு தரப்பில் ஒரு தெளிவு கிடைத்தால் நல்லா இருக்கும்..!!












Click it and Unblock the Notifications