ரூ.1000 வாங்கிட்டீங்களா.. மகளிர் உரிமைத் தொகையில்.. புதுசா முளைத்த சிக்கல்.. லைன்கட்டி வந்த கட்சிகள்
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வைத்து, எதிர்க்கட்சிகளின் அரசியல் ஆரம்பமாகி உள்ள நிலையில், இதை திமுக எப்படி எதிர்கொள்ள போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக, தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகிறார்கள்.

அதிருப்தியாளர்கள்: மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டு வரும்நிலையில், பொதுமக்களிலேயே ஒருசாரார் வருத்தத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அந்த அதிருப்தியாளர்களின் வருத்தத்தையும் தமிழக அரசு போக்கும் நடவடிக்கையில் இறங்கியது.
மேல்முறையீடு செய்யப்பட்டவர்களுக்கு உரிமைத்தொகை + தீபாவளி பண்டிகைக்கு முன்பே உரிமைத்தொகை என டபுள் அதிரடியை தமிழக அரசு செய்திருந்தது. எனினும், விரைவில் தேர்தல் வரஉள்ள நிலையில், மகளிர் உரிமைத்திட்டத்தை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன..
இந்த உரிமைத்தொகை திட்டம் குறித்து, ரகசியமாக ஒரு சர்வே எடுக்கும்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உத்தரவிட்டிருக்கிறாராம்.. இந்த திட்டம், பெண்களிடம் எந்தளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது ? அதிருப்தி இருக்கிறதா? என்பது குறித்து சர்வே எடுத்து ரிப்போர்ட் தரும்படியும் சொல்லியிருக்கிறாராம். தன்னுடைய குடும்பத்தினரிடம் இந்த பொறுப்பை தந்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. அந்த உறவுக்காரரும் தனியார் ஏஜென்சி ஒன்றின் உதவியுடன் எடுத்து வருகிறார்.
அதேபோல, மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளவர்களின் லிஸ்ட் வேண்டுமென அரசாங்கத்தில் உள்ள தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடமும் கேட்டிருக்கிறாராம் எடப்பாடி. ஆக 2 விதமான லிஸ்ட் தயாராகி கொண்டிருக்கிறதாம்.
மகளிர் சுயஉதவிக்குழு: குறிப்பாக, திமுக மகளிர் அணியில் இருப்பவர்கள், திமுக ஆதரவு மகளிர் சுயஉதவிக்குழுவில் இருப்பவர்கள் தான் இதில் அதிக அளவில் பலனடைந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தகவல் தரப்பட்டதாம். அதனால்தான், இந்த லிஸ்ட் கேட்டுள்ளார்.
இதுபோலவே, பாஜகவும் இதே மகளிர் தொகை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கக்கோரி அக்டோபர் 18ம் தேதி, தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட அதிரடியும் தயாராகி வருகிறதாம்.
அதேபோல, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று ஒரு கருத்து கூறியிருக்கிறார்.. "நிராகரிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என்பதை நம்பி, 11.85 லட்சம் பேர் அப்பீல் செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே உரிமைத்தொகை தரப்படும் என்றார்கள். ஆனால் வெறும் 7.3 லட்சம் பயனாளிகளுக்கு மட்டுமே தரப்போவதாக சொல்கிறார்கள். மேல்முறையீடு செய்கின்றபோது அந்த விதிகளை தளர்த்தினால்தான், முழுமையாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும்" என்று சுட்டிக்காட்டி உள்ளார்.
டாக்டர் ராமதாஸ்: "மகளிர் உரிமை உள்ளிட்ட பெயர்களில் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டாலும், அதில் பெரும் பகுதி மது வணிகம் என்ற பெயரில் அரசுக்கே திரும்ப வரும் அவலம் தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது, இதே நிலை நீடிக்கும் வரை தமிழக மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் விமர்சித்திருக்கிறார்.
இன்றைய தினம் ராஜபாளையத்தில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேசும்போது, மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற உறுதியை தந்திருக்கிறார் என்றாலும்,
திமுகவுக்கு தலைவலி: இப்படி எதிர்க்கட்சிகள் மொத்தமாக திரண்டு திமுகவுக்கு எதிரான காய்களை நகர்த்த துவங்கியிருப்பதாக தெரிகிறது. இதை திமுக எப்படி எதிர்கொள்ள போகிறது? படாதபாடு பட்டு, உரிமைத்தொகை திட்டத்தை அமல்படுத்தியபோதும்கூட, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எப்படி முறியடிக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications