Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமைத் தொகை.. ரூ.1000 வரலியா.. அடுத்த அதிரடியை பாருங்க.. இனி மிஸ்ஸாகாது..பெருகும் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களின் மேல்முறையீட்டை பரிசீலிப்பதற்காக, துணை ஆட்சியர், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருப்பதாக, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக, தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகிறார்கள்.

rs1000 Magalir Urimai thogai and Special Training forTN Govt officers to take action on Womens Entitlement project

மகளிர் உரிமைத்தொகை: இந்நிலையில், இந்த விவகாரத்தில், அமைச்சர் உதயநிதியின் நடவடிக்கைகள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 2 நாளைக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை உதயநிதி ஆய்வு செய்திருந்தார்.

அப்போது, உரிமைத்தொகை கேட்டு மேல்முறையீடு செய்திருந்த 3 பெண்களுக்கு போனை போட்டு பேசினார்.. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அவர்களிடம் எடுத்து சொன்னார்.. அதன் நியாயத்தை உணர்ந்து, உதயநிதி சொன்னதையும் அந்த பெண்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த தகவலை உதயநிதியே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அரசு அலுவலர்கள்: அதுமட்டுமல்ல, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற, ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் உதயநிதி கூறியிருந்தது, பெருத்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் பெண்களிடம் ஏற்படுத்தியது. இதோ நேற்றுகூட, இந்த உறுதியை உதயநிதி அளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடந்தது.. அப்போது மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களுக்கு 1200 மகளிர் உரிமைத் தொகை டெபிட் கார்டுகளை உதயநிதி வழங்கியதுடன், 9 ஆயிரம் பயனாளிகளுக்கு 157 கோடியே 33 லட்சம் அளவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

திருநெல்வேலி: அப்போது உதயநிதி பேசியதாவது: "இதுவரை 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும், கிட்டத்தட்ட 2 லட்சத்து 48 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டது, இதுவே முதல்முறை.

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி தான் உங்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான தேதி என்றாலும், ஒரு நாள் முன்னதாக 14ம் தேதியே கழக அரசால் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு 1200 டெபிட் கார்டுகளை வழங்குகிறோம் என்றால், இவை பணம் எடுப்பதற்கான கார்டுகள் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையை மாற்ற போகிற துருப்புச்சீட்டு.

வாக்குறுதிகள்: இந்தத் திட்டத்தை பின்பற்றி, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்த ஒரு அரசு திட்டத்தை செயல்படுத்தப்படுகிறபோதும், மேல்முறையீடு செய்கிற வசதி இருக்காது. ஆனால், இந்த மகளிர் உரிமைத்திட்டத்தை பொறுத்தவரை, விண்ணப்பம் ஏற்கபடாதவர்கள், மறுபடியும் மேல்முறையீடு செய்கிற வசதியை செய்து தந்திருக்கிறோம். இதுவரை 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

மேலும், உங்கள் மேல்முறையீட்டை பரிசீலிக்க துணை ஆட்சியர், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருக்கிறோம்.. மகளிர் மட்டுமன்றி திருநங்கையர், மாற்றுத்திறனாளிகளும் இன்றைக்கு இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர்.

அப்பீல்: மேல்முறையீடு செய்வதற்கான காலம் முடிவடைந்த நிலையில், அந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீதான பரிசீலனையை சாத்தூர் கோட்டத்தில் ஆய்வு செய்தோம். நான் சட்டமன்றத்தில் பேசியது போல், தகுதியுள்ள ஒரு மகளிர் கூட இந்த திட்டத்தில் இருந்து விடுபட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறோம்" என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+