ரூல்ஸ் மீண்டும் மாறுதா? மகளிர் உரிமைத்தொகை எல்லாருக்கும் கிடைக்காதா?.. ஆஹா வெளியான "நம்பிக்கை" தகவல்
சென்னை: 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்குமா? என்ற சந்தேகமும், குழப்பமும் பரவலாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக அமைச்சர் இதற்கு பதிலளித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடியே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அமலாக்கி உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. அந்தவகையில், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பலரும் பலன்பெற்று வருகிறார்கள்..

விண்ணப்பங்கள்: ஆனால், இந்த திட்டத்தில், சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோரும் கூட தாங்கள் தகுதியுள்ளவர்கள் என்று கருதினால் வரும் 18ம்தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளதால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோரில் பலரும் மேல்முறையீடு செய்து வருகிறார்கள்..
இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் மேல்முறையீட்டு செய்துள்ள நிலையில், உரிமைத்தொகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கடந்த 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், 14ம் தேதியே, அதாவது கடந்த சனிக்கிழமையே வங்கிக் கணக்கில் பணம் வரவு வைத்திருந்தது.
சனிக்கிழமை: எப்படியும் இன்றைய தினம் திங்கட்கிழமைதான், பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென சனிக்கிழமையே பணம் வரவு வைக்கப்பட்டதற்கான மெசேஜ் வந்ததுமே, பெண்கள் குஷியாகிவிட்டனர். இதனிடையே, தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடனில் இருக்கும்போது, இதுபோன்ற திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்கும் என்பதால் இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு தொடரப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பையும் தந்து வருகிறது.
எனவே, மேல்முறையீடு செய்தவர்களுக்கு பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற அச்சமும் தொற்றிக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், உரிமைத்தொகை குறித்த நம்பிக்கை வார்த்தைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்..
காலை உணவு திட்டம்: தஞ்சையில், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "நம் நாட்டிலேயே, தமிழ்நாடு தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 31 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டை பின்பற்றி, இந்த மாதத்தில் தெலுங்கானா மாநிலத்திலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது..
பள்ளிகளில் பழுதடைந்த சுவர்கள், விரிசல் ஏற்பட்ட கட்டிடம் , பழுது அடைந்த கட்டிடங்களை அகற்றும் பணி ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்தாலும், மழைக்காலம் வரப்போவதால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அந்தப் பணிகள் நடந்து வருகிறது... மழைக்காலங்களில் பள்ளி விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவெடுத்து கொள்ளலாம் என அறிவுறுத்தியிருக்கிறோம்.
உரிமைத்தொகை: ஒரு திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று, ஒரு திட்டத்தை சொன்னால் அது கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தான்... இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய முடியாது. தகுதி வாய்ந்த பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை விடுபடாமல் கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார் அன்பில் மகேஷ். திமுக அமைச்சரின் இந்த உறுதியானது, பெண்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications