இனியெல்லாம் மாறுது போலயே.. ரூ.1000 மகளிர் உரிமை தொகை அடுத்த லெவல்.. ரெடியான எதிர்க்கட்சி.. பலே திமுக
சென்னை: தகுதியுள்ள ஒருவர்கூட, உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.. எனினும், எதிர்க்கட்சிகள் இந்த 1000 ரூபாய் விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.
விரைவில் தேர்தல் வர உள்ளது.. இந்நிலையில் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்காக உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிரையும் சேர்க்க, அரசு முயன்று வருகிறது.

மேலும், அதிருப்தியாளர்களின் வருத்தத்தையும் போக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியிருக்கிறது. எனினும், மகளிர் உரிமைத்திட்டத்தை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயன்று கொண்டிருக்கன்றன.
இந்த உரிமைத்தொகை திட்டம் குறித்து, ரகசியமாக ஒரு சர்வே எடுக்கும்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே உத்தரவிட்டதாக தகவல்கள் வந்தன. குறிப்பாக, இந்த திட்டம், பெண்களிடம் எந்தளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது ? அதிருப்தி இருக்கிறதா? என்பது குறித்து சர்வே எடுத்து ரிப்போர்ட் தரும்படியும் சொன்னாராம்.
உரிமைத்தொகை: அதேபோல, மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளவர்களின் லிஸ்ட் வேண்டுமென அரசாங்கத்தில் உள்ள தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடமும் கேட்டிருந்தாராம் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக, திமுக மகளிர் அணியில் இருப்பவர்கள், திமுக ஆதரவு மகளிர் சுயஉதவிக்குழுவில் இருப்பவர்கள் தான் இதில் அதிக அளவில் பலனடைந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தகவல் தரப்பட்டதாலேயே, இந்த உரிமைத்தொகை விஷயத்தில் முனைப்பு காட்டி வருவதாக சொல்கிறார்கள். .
இதுபோலவே, பாஜகவும் இதே மகளிர் தொகை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருக்கும் நிலையில், வெள்ள நிவாரண விவகாரத்தையும் சேர்த்து, விமர்சித்து வருகிறது.
விண்ணப்பம்: அதனால்தான், எதிர்க்கட்சிகளுக்கு விமர்சிக்க வாய்ப்பளிக்ககூடாது என்பதற்காக, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், வரும் ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி மாதம் இதற்கான புதிய விண்ணப்பங்கள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே இந்த திட்டத்தில் சேருவதற்காக, 11.8 லட்சம் பேர் மறுவிண்ணப்பம் தந்திருக்கிறார்கள். எனினும், விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதனிடையே, ஜனவரி முதல் கூடுதலாக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால், அப்போதும் மேலும் சில தகுதியானவர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட உள்ளனர்..
தமிழக அரசு: அதேபோல, தற்போது உதவித்தொகையை வழங்கும் தேதியான 15-லிருந்து, வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால், தகுதியுள்ள ஒரு மகளிர் கூட விடுபட்டுக்கூடாது என்பதற்காகவே, இந்த விஷயத்தில் அரசு விழிப்புடன் இருப்பதாக சொல்கிறார்கள். அதனால்தான், இதுவரை மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார்.
இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லையாம்.. காரணம், இவர்கள் எல்லாருமே 4 சக்கர வாகனத்தை வைத்திருப்பதாக கூறி, மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கோரிக்கை: அதாவது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 2 சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, வாகனத்தின் 2 பக்கமும், கூடுதலாக 2 சக்கரங்கள் இணைக்கப்படும்..
அதனால், இதனை 4 சக்கர வாகனங்களாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் நிலையில், அதனை நிஜமாகவே கார், வேன் போல, "4 சக்கர வாகனம்" என்று கருதி, மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுவிட்டதாம். எனவே, இது சம்பந்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் அதிகமாகி கொண்டிருக்கின்றன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications