ரூ.3000 பொங்கல் பரிசு டோக்கன்கள்.. பயனாளிகளின் ரொக்க பணம்! தினமும் 400 பேருக்கு வீடு வீடாக சர்ப்ரைஸ்
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வரும் நிலையில், கூட்டுறவு துறை குட்நியூஸ் ஒன்றை பிறப்பித்துள்ளது.. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது, தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே, பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரொக்கம் வழங்கப்படுமா, எவ்வளவு வழங்கப்படும்? எப்போது வழங்கப்படும்? என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு - சர்ப்ரைஸ்
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கம் வழங்கப்படாமல் இருந்தது விமர்சனங்களை எழுப்பி வந்தது.. காரணம், அதிமுக ஆட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 ரொக்கம் கொடுக்கப்பட்டது. இதுவரை கொடுக்கப்பட்ட அதிகபட்ச ரொக்கம்தான் 2500 ரூபாய்தான்..
அதற்கு பிறகு திமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது... இதையடுத்து., விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இதுவரை வழங்காத ரொக்கம் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டது..ரூ.5000 தரலாமோ என்றுகூட அரசு நினைத்தது..ஆனால், மகளிர் உரிமை தொகை மாதம் வழங்குவதால் நிதி நெருக்கடி சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு வீடு வீடாக டோக்கன்
எனவே, அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக அரிசி , சர்க்கரை உள்ளிட்டவை ரேஷன் கடைகளுக்கு பெருமளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவுத்துறை - டோக்கன்கள்
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரான நந்தகுமார் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் மிக முக்கியமான ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்.
ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் மற்றும் டோக்கன் வினியோகம் குறித்தும் குறித்தும் பின்வரும் அறிவுரைகளை பின்பற்றி இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட அறிவுறுத்தப்படுகிறது.
மண்டலங்களில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப ஜனவரி 2-ந் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை கொடுப்பார்கள்
100 ரேஷன் அட்டைதாரர்கள்
ரேஷன் அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும். முதல் நாள் முற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பிற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பிற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.
இரண்டாவது நாட்களில் இருந்து காலையில் 200 பேர், பிற்பகலில் 200 பேர் என மொத்தம் 400 பேருக்கு பொங்கல் பரிசு தொகைக்கு விநியோகம் செய்திட வேண்டும்
சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழக்கூடிய ரேஷன் கடைகள், அதிக கூட்ட நெரிசல் ஏற்படக்கூடிய ரேஷன் கடைகள் போன்ற கடைகளின் பட்டியல்கள் முன் கூட்டியே தயார் செய்யப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications