ரூ.500 கோடி தேனி பெண்ணுக்கு சொத்து? பரபர கடத்தல் கேஸ்! நாளை பூவை ஜெகன்மூர்த்திக்கு ஜாமீன் கிடைக்குமா
சென்னை: காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. அத்துடன் இன்றைய தினம் பூஜை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கப்படுமா? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ஏற்பட்ட நிலையில், நாளைய தினம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த இளம்பெண்ணை இன்ஸ்டாகிராமில் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த தேனி பெண்ணுக்கு ரூ.500 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிகிறது. .

காதல் விவகாரம்
இந்த காதல் விவகாரத்தில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிலர் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து இளைஞரின் 16 வயது சகோதரரை கடத்தி சென்றுவிட்டனர். இந்த சிறுவன் கடத்தல் சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், கேவி குப்பம் தொகுதி எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் முன்னாள் சிறப்பு டிஜிபி ஜெயராமன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே பூவை ஜெகன் மூர்த்தியை விசாரிக்க முடிவு செய்து அவரது வீட்டுக்கு போலீசார் சென்றிருந்தனர். ஆனால், ஜெகன்மூர்த்தி தலைமறைவானார். பின்னர் அவரை போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அதேபோல ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.
ஜெகன்மூர்த்தி விசாரணை
இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் பங்குக்கு உரிய விசாரணை நடத்தவேண்டும் என மதுரை ஹைகோர்ட் கூறியிருந்தது. கடத்தப்பட்ட சிறுவன் பிறகு மீட்கப்பட்டாலும், பழி மற்றும் அரசியல் ஆதிக்கம் காரணமாக இந்த செயல் நடைபெற்றதாக கூறப்படுவதால், அரசியல் களத்திலும் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது..
வழக்கு விசாரணையை சிபிசிஐடி நடத்தி வரும் நிலையில், ஏடிஜிபி ஜெயராமனிடம் விசாரணையை நடத்தியது,.. ஜெகன்மூர்த்தியின் போலீஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டு, அவரிடமும் விசாரணை நடந்தது. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் இவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்
அதேபோல, முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி, ஒரு வழக்கறிஞர் உள்ளிட்ட 3 பேர் மீதும் சந்தேகம் உள்ளது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 19ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் 2 விதமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. அதாவது, சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவையடுத்து 2 பேர் மீதும் சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது..
ஜாமீன் கிடைக்குமா
அதேபோல, சிறுவன் கடத்தல் வழக்கில் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் ஜெகன் மூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீனுக்காக கடந்த வாரம் மனுதாக்கல் செய்திருந்தார்.. அத்துடன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதியிடம், அவரது தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. எனவே, நாளைய தினம் ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிபிசிஐடி வழக்கு பதிவு, மறுபக்கம் ஜாமீன் மனு என பூஜை ஜெகன்மூர்த்தி விவகாரம் பரபரத்து காணப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications