162 சவரன் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.90 லட்சம் பெற்று.. சென்னை பேங்க் மேனேஜரின் அதிர்ச்சி காரியம்
சென்னை: அடகு வைக்க 162 சவரன் நகைகளை வாடிக்கையாளர் வங்கியில் தந்துள்ளார். இதற்காக வங்கி கேஷியரிடம் கையெழுத்தும் பெறப்பட்டுவிட்டது.. ஆனால், அடகு வைக்க தரப்பட்ட நகைகளை காணவில்லை.. கடந்த ஜூலை மாதம் சென்னையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவத்தின் உண்மை குற்றவாளி பிடிபட்டுள்ளார். சென்னை போலீசார் ஐதராபாத்துக்கே விரைந்து சென்று குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை விஜிபி சாலையை சேர்ந்தவர் சுலைமான்.. 32 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் கிண்டி லாயர் ஜெகநாதன் தெருவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இதனால் அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் செலுத்தியும், பணத்தை எடுத்தும் வந்துள்ளார். இதனால் வங்கி மேனேஜர் சாமிநாதனுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அடமான நகைகள்
கடந்த ஜூலை 2ம் தேதி, நகை அடகு வைக்க வேண்டும் என்று வங்கி மேனேஜர் சாமிநாதனிடம் போனில் சொல்லி உள்ளார் சுலைமான்.. அதற்கு சுலைமான், நீங்க வங்கிக்கு வர வேண்டாம், நானே ஊழியரை அனுப்பி உதவி செய்கிறேன் என்று சாமிநாதன் சொல்லி உள்ளார்.
அதன்படி, சுலைமான் பணம் தேவைப்படும் போதும், வங்கி மேலாளர் சாமிநாதனை தொடர்பு கொள்வார். அவர் ஊழியர் ஒருவரை சுலைமான் வீட்டிற்கு அனுப்புவார். அப்போது, ஊழியர் படிவங்களை பூர்த்தி செய்து தேவையான பணத்தை கொடுத்துவிடுவார்.
162 சவரன் தங்கம் நகை
அந்தவகையில் கடந்த ஜூலை 2ம் தேதியும், வங்கி கேஷியர் பிரசாத் என்பவரை சுலைமான் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் சாமிநாதன். சுலைமானும், அடமானம் வைத்து பணம் பெறுவதற்காக, தன் வீட்டிலிருந்து162 சவரன் நகைகளை எடுத்து கேஷியரிடம் தந்துள்ளார். உடனே நகையை பெற்று கொண்டதற்கான வங்கி படிவத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கேஷியரும் வங்கிக்கு கிளம்பி சென்றுவிட்டார்.
பிறகு சாமிநாதனுக்கு போனை போட்டு தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார் சுலைமான்.. அதற்கு சாமிநாதன், 'சர்வர் வேலை செய்யவில்லை, ஆடிட்டிங் நடக்கிறது, என்றெல்லாம் ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் அவரது பேச்சில் சந்தேகம் ஏற்படவே, சுலைமான் நேரடியாகவே வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான், பண மோசடியில் ஈடுபட்டதால் சாமிநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அடகு வைக்கப்பட்ட நகைகள்
இதனால் அதிர்ச்சியடைந்த சுலைமான், உடனடியாக இது குறித்து சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசாரும் அது தொடர்பான விசாரணையை கையில் எடுத்தனர்.. அப்போது, சுலைமான் கொடுத்த நகைகளை, சாமிநாதன் பல நாட்களாக பயன்படுத்தப்படாமல் உள்ள வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் அடகு வைத்து, 90 லட்சம் ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது.
இதற்கு 25 வயதான கேஷியர் பிரசாத், வங்கி ஆப்ரேட்டிங் மேலாளர் திவாகர் 32, ஆகியோரும் உடந்தையாக இருப்பது தெரியவந்தது.. உடனடியாக அவர்கள் 2 பேரையும் கடந்த செப்டம்பர் 23ம் தேதி கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான சாமிநாதனை தனிப்படை அமைத்து தேட ஆரம்பித்தனர்.
சுற்றி வளைத்த போலீஸ்
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் ஹைதராபாத் விரைந்து சென்று சாமிநாதனை சுற்றிவளைத்து கைது செய்தனர்..
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவராம் சாமிநாதன்.. அவரிடம் இருந்து 162 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது..
இதேபோல வேறு யாரிடமாவது சாமிநாதன் மோசடி செய்திருக்கிறாரா? என்ற விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த ஜூலையில் நடந்த கையாடல் சம்பவத்தில் குற்றவாளி, 5 மாதங்களுக்கு பிறகு கைதாகி உள்ளது, பரபரப்பை தந்து வருகிறது.
-
கயிறு அவிழப்போகுது.. தங்கத்தின் 'திக் திக்' நிமிடங்கள்.. ஸ்விஸ் வங்கி விடுக்கும் பயங்கர வார்னிங்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
மூட்டை மூட்டையாக.. தங்கத்தை டன் கணக்கில் மார்க்கெட்டில் கொட்டிய துருக்கி.. ஏன் தெரியுமா? ஷாக் -
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications