ஆளுநர் ரவிக்கு பின்னாடி "மாஸ்டர்மைண்ட்".. அந்த பலம்தான் காரணமே.. பாய்ந்த திமுக.. இப்படி சொல்றாங்களே
சென்னை: தமிழ்நாட்டு ஆளுநர்.. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி.. தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பிகள் அண்ணா.. பெரியார்.. காமராஜர்.. கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பெயரை சொல்ல முடியாது என்றால் அவர் தமிழ்நாட்டில் இருக்க வேண்டுமா? ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் இருக்க தகுதி உள்ளவரா? தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுப்பதை படிக்க வேண்டும் என்பதுதான் மரபு, என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும்.. முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் அடுத்த லெவலை அடைந்து உள்ளது. இத்தனை நாட்கள் அறிக்கை, கட்டுரை, பேட்டி என்று மோதல் நிலவி வந்தது. இந்த மோதல் தற்போது சட்டசபையிலேயே மோதிக்கொள்ளும் அளவிற்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன.
இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று முதல்நாள் தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு, திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அளித்த பேட்டியில், தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவங்கள் நடந்துள்ளன. இதெல்லாம் பண்ண கூடாது என்று தெரிந்தும் ஆளுநர் இப்படி எல்லாம் செய்கிறார். ஆளுநர் இப்படி எல்லாம் செய்வது என்று தெரியவில்லை, பெரிய பொறுப்புகளுக்காக இப்படி செய்கிறாரோ என்று சபாநாயகர் குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருந்து சர்ச்சையில் சிக்கி ஜெகதீஸ் தங்கர் துணை ஜனாதிபதி ஆனது போல பெரிய பதவிக்கு ஆசைப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சபாநாயகர் இப்படி எல்லாம் குற்றச்சாட்டு வைக்க மாட்டார். ஆனால் அவரே குற்றச்சாட்டு வைக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்று.

சபாநாயகர்
சபாநாயகரே ஆற்றாமையில் பேசுகிறார் என்றால் நிலைமை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அவரையே அப்படி பேச வைத்து இருக்கிறார். சட்டசபையில் தவறு நடக்கும் பட்சத்தில் அதை கேள்வி கேட்கும் உரிமை சபாநாயகருக்கு இருக்கிறது. அதை அவர் செய்து இருக்கிறார். தமிழ்நாட்டு ஆளுநர்.. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி.. தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பிகள் அண்ணா.. பெரியார்.. காமராஜர்.. கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பெயரை சொல்ல முடியாது என்றால் அவர் தமிழ்நாட்டில் இருக்க வேண்டுமா? அவர் தமிழ்நாட்டில் இருக்க தகுதி உள்ளவரா? தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுப்பதை படிக்க வேண்டும் என்பதுதான் மரபு.

திமுக சரவணன்
அதை ஆளுநர் மீறி உள்ளார். சட்டசபை மரபை ஆளுநர் மீறி உள்ளார். சட்டம் இல்லாத விஷயங்களை மரபு என்று கூறி நாம் பின்பற்றுகிறோம். சட்டசபை மரபுகளை மீறக்கூடாது உச்ச நீதிமன்றமே சொல்கிறது. சட்ட விதி 175படி ஆளுநர் தன்னிச்சையாக எதையும் பேச கூடாது உச்ச நீதிமன்றமே தெளிவாக சொல்லி இருக்கிறது. ஆளுநர் ஏன் இப்படி பேச வேண்டும்.. அவருக்கு இந்த பலத்தை.. அதிகாரத்தை.. திமிரை கொடுப்பது ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ், ஒன்றிய அரசு தனக்கு பின்னால் இருக்கிறது. அந்த தைரியத்தில் பேசுகிறேன் என்று அவர் பேசிக்கொண்டு இருக்கிறார்.

ஆளுநர் ரவி
ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பொதுவாகவே இது போன்ற விஷயங்கள் கசக்கும். அவர்களுக்கு திராவிட என்று சொன்னால் கசக்கும். அதனால் அவர்களின் ஊதுகுழலாக ஆளுநர் பேசிக்கொண்டு இருக்கிறார். அதனால்தான் சனாதனம் பற்றி ஆளுநர் பேசிக்கொண்டு இருக்கிறார். திராவிட அரசியலை பிற்போக்கு தனமான அரசியலை பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் இப்படி எல்லாம் பேச என்ன கட்டாயம் என்று தெரியவில்லை. அபத்தமான, அவதூறான குற்றச்சாட்டுகளை ஆளுநர் வைத்து வருகிறார். ஆளுநர் பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக இருக்கிறது. அவர் அதனால் பிற்போக்காக பேசுகிறார்.

அரசியலமைப்பு சட்டம்
ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்படிதான் பேச வேண்டும். திராவிடம் பிடிக்க வில்லை.. சானதனம் பிடிக்கிறது என்றெல்லாம் அவர் சொல்ல முடியாது. அவருக்கு தனிப்பட்ட தேர்வுகள் இருக்க முடியாது. அவர் ஒரு பப்பெட். அவர் ஒரு பொம்மை. அவர் அரசியலமைப்பு சட்டத்தைதான் பின்பற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் பின்னால் இருக்கிறது என்று அவர் எல்லாம் பேச முடியாது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இப்படி பிரச்சனை செய்வது இல்லையே. ஆளுநருக்கு தனிப்பட்ட கருத்து, கொள்கை எல்லாம் இருக்க கூடாது. அவர் அந்த இடத்தில் இருக்க முடியாது. இது ஜனநாயக ஆட்சி. இதற்கு எதிராக.. மக்களால் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக பேசவே முடியாது, என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications