சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

50 கேஸ் போட்டு சாதித்த ஆர்எஸ்எஸ்! ஆகட்டும் பார்க்கலாம் என கடைசிவரை மல்லுக்கட்டிய திராவிட மாடல் அரசு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் நீதிமன்ற படிகளேறி ஒருவழியாக 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி பெற்றுவிட்டது. இன்னொரு பக்கம் தமிழக அரசு கடைசிவரை பல்வேறு வகைகளில் இந்த விவகாரத்தில் போராடியது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த எப்போதும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் பல இடங்களில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த எதிர்ப்பு தொடருகிறது.

இந்த ஆண்டும் அக்டோபர் 2-ந் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டது. ஆனால் தமிழக காவல்துறை இந்த ஊர்வலங்களுக்கு அனுமதி தரவில்லை. இதனால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளின் விசாரணையின் போது ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி தரலாம் என உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி.. கோவை, பொள்ளாச்சியில் தடை.. ஹைகோர்ட் உத்தரவு! தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி.. கோவை, பொள்ளாச்சியில் தடை.. ஹைகோர்ட் உத்தரவு!

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்த காலத்தில், ஃபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது தடை, பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு என பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனால் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி தரப்படவில்லை.

 மீண்டும் மீண்டும் கோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ்.

மீண்டும் மீண்டும் கோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ்.

உடனே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்ததாக, காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புகளை ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தொடர்ந்தது. இவ்வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அப்போது, தமிழக காவல்துறை தரப்பில், அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் விவரிக்கப்பட்டது. மத்திய- மாநில அரசுகளின் புலனாய்வு அறிக்கைகளை சுட்டிக்காட்டி இந்த வாதம் முன்வைக்கப்பட்டது.

 நீதிமன்றம் எச்சரிக்கை

நீதிமன்றம் எச்சரிக்கை

இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தமிழகத்தில் நவம்பர் 6-ந் தேதி ஊர்வலம் நடத்த அனுமதிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். அத்துடன் அக்டோபர் 31-ந் தேதிக்குள் இந்த அனுமதி வழங்க வேண்டும்; அப்படி காவல்துறை அக்டோபர் 31-ந் தேதிக்குள் அனுமதி தராவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார் நீதிபதி இளந்திரையன். பின்னர் அக்டோபர் 31-ந் தேதி இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது நிபந்தனைகளின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு நவம்பர் 6-ந் தேதி அனுமதி வழங்க அனைத்து மாவட்ட ஆணையர்கள், கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்கை முடித்து வைக்கவும் கோரப்பட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் இந்த வழக்கை முடிக்க கூடாது என்றது.

தமிழக அரசு திட்டவட்டமான நிலை

தமிழக அரசு திட்டவட்டமான நிலை

இதனையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின் போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வல அனுமதி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்; அப்படி தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே உத்தரவிடும் என நீதிபதி கூறினார். அப்போது, கடலூர்- பெரம்பலூர்- கள்ளக்குறிச்சி என 3 இடங்களிதான் ஊர்வலத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது; 47 இடங்களில் அனுமதி தரவில்லை என ஆர்.எஸ்.எஸ்.தரப்பு தெரிவித்தது. இதற்கு பதிலளித்த தமிழக காவல்துறை 24 இடங்களில் அனுமதி வழங்க முடிஅயத நிலைமை உள்ளது; 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டம் நடத்த அனுமதிக்கலாம் என்றது. தற்போது கனமழையை சுட்டிக்காட்டியது காவல்துறை தரப்பு. இந்த விசாரணையின் போது புலனாய்வுத் துறை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

44 இடங்களில் அனுமதி

44 இடங்களில் அனுமதி

இதன்பின்னரே இன்று ஒருவழியாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதித்தது. கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 இடங்களில் பின்னர் ஊர்வலம் நடத்தலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கான அனுமதி தருவதில் கடைசிநிமிடம் வரை தமிழக அரசு போராடிப் பார்த்தது.. ஆர்.எஸ்.எஸ்.இயக்கமும் விடாமல் முயற்சித்தது. கடைசியில் நீதிமன்ற அனுமதியை பெற்றேவிட்டது ஆர்.எஸ்.எஸ்.

English summary
Finaly RSS got Permission from Madras High Court for Rally on Nov.6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X