'ஆர்.எஸ்.எஸ் பேரணி' காவல்துறை நிபந்தனை: பாரபட்சமான முடிவு.. Shame on TN Police- ஹெச்.ராஜா ட்வீட்
சென்னை: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை விதித்த நிபந்தனை அரசியல் நிர்பந்தத்தால் எடுக்கப்பட்ட பாரபட்சமான முடிவு என்பது தெளிவாக தெரிவதாகவும் Shame on TN Police என்றும் ஹெச்.ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்.
காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியது.
பல்வேறு நிபந்தனைகளுடன் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க
எனினும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை போலீசாருக்கு உத்தரவிட்டது.

44 இடங்களில் பேரணி நடத்த அனுமதி
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை மற்றும் நாகர்கோவில் ஆகிய 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்த நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து இருந்தது.

தற்காலிகமாக ஒத்திவைப்பு
அதேவேளையில், சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும். கத்தி, ஆயுதங்களை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் எடுத்துச் செல்லக் கூடாது; மத மோதல்களை தூன்டும் வகையில் பேசக் கூடாது என 11 நிபந்தனைகளை விதித்து இருந்தது. ஆனால் இந்த நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.எஸ்.எஸ், ஊர்வலத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.

ஹெச் ராஜா ட்வீட்
எனினும் 3 இடங்களில் மட்டும் இன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும் என அறிவித்தது. இதன்படி, கடலூர்,கள்ளக்குறிச்சியிலும், பெரம்பலூரிலும் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் பேரணி இன்று நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் பேரணியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை அரசியல் நிர்பந்தத்தால் எடுக்கப்பட்டது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹெச்.ராஜா தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:-

பாரபட்சமான முடிவு என்பது தெளிவு
"இந்த மாவட்டங்களில் வீதிகளில் பேரணி எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நடக்க முடியுமானால் மற்ற மாவட்டங்களில் காம்பவுண்டிற்குள் நடத்த வேண்டும் என்ற காவல்துறையின் நிபந்தனை அரசியல் நிர்பந்தத்தால் எடுக்கப்பட்ட பாரபட்சமான முடிவு என்பது தெளிவு. Shame on TN Police" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications