மொத்தமாக கதவை க்ளோஸ் செய்த பாஜக.. அமித் ஷா, மோடி ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கணும்? ஆர்எஸ்எஸ் பவரா?
சென்னை: பாஜகவில் நடக்கும் தேசிய அளவிலான மாற்றங்கள் அந்த கட்சியினரையே குழப்பி உள்ளது. பாஜகவிலேயே அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் நிர்வாகிகள் குழம்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பாஜகவின் தேசிய அளவிலான தோல்விக்கு பொறுப்பேற்று நட்டா பதவி விலக போகிறார். அதேபோல் தேர்தலை முன்னின்று கவனித்த அமித் ஷாவும் அமைச்சரவையை மட்டும் கவனிக்க வேண்டும் என்ற உத்தரவுடன் ஓரம்கட்டப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இனி பாஜகவில் மீண்டும் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் இருக்கும். ஆர்எஸ்எஸ் இல்லாமல் உத்தர பிரதேசத்தில் கூட ஜெயிக்க முடியாது என்பதை பாஜக நிரூபித்துவிட்டது. இந்த நிலையில்தான் புதிய தலைவர் தேர்விலும் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தலைவர் மாற்றம்: பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே பி நட்டா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. நேற்று அவர் அமைச்சராக தேர்வாகி உள்ளார். இத்தனை நாட்கள் வெறும் தேசிய தலைவராக இருந்த அவர் அமைச்சராகி உள்ளார்.
அவர் பாஜக சட்டப்படி இரண்டு பொறுப்புகளில் இருக்க முடியாது என்பதால் பாஜக தேசிய தலைவர் பதவியில் நீடிக்க முடியாது.
இது போக பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய தலைவர்.
சிவராஜ் சிங் சவுகான் இந்த லோக்சபா தேர்தலில் ஓரங்கட்டப்பட்டார். மோடி, நட்டா, அமித் ஷா மூலம் பிரச்சாரத்திற்கு கூட கொண்டு வரப்படாமல் ஓரம்கட்டுப்பட்டார். முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டு வீட்டில் அமர வைக்கப்பட்டார். இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் அழுத்தம் காரணமாக தற்போது சிவராஜ் சிங் சவுகான் ஆக்டிவ் அரசியலுக்குள் மீண்டும் நுழைந்து உள்ளார். ஆனால் அவரும் தற்போது அமைச்சராகி உள்ளார்.
யார் அடுத்த தலைவர்?: அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் அவர் அமைச்சர் ஆவதால் வேறு ஒருவர் பாஜக தலைவராக உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆர்எஸ்எஸ் சார்பாக ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் அமைச்சர் ஆகிவிட்டார். எனவே அவரும் அவுட். இதனால் பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் தலைவருக்கான லிஸ்ட்டில் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளார்.
இது போக ஆர்எஸ்எஸ் 3 பேர் கொண்ட லிஸ்ட் ஒன்றையும் தயார் செய்து உள்ளதாம். அவர்களில் ஒருவர்தான் கண்டிப்பாக தலைவர் ஆவார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
