ரயில்வே கம்பளிகள் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படுகின்றன! ஆர்டிஐ-ல் வெளியான ஷாக் தகவல்
சென்னை: ரயில்களில் ஏசி கோச்களில் பயணம் செய்யும் போது போர்வைகள் வழங்கப்படுகின்றன. இந்த போர்வைகள் குறித்து அடிக்கடி புகார்கள் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ரயில்களில் பயன்படுத்தப்படும் போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்கப்படுகிறது? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் விவாதங்களை கிளப்பியுள்ளன.
சர்வதேச அளவில் இந்தியன் ரயில்வே மிகவும் பழமையானதாகும். ஒவ்வொரு நாளும் சுமார் 23 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரயில்வே கொண்டு சேர்க்கிறது. இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால், ரயில் துறை மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.

நேரம் கடைபிடிப்பதில்லை, போதிய ரயில்கள் இல்லை, கூடுதலான முன்பதிவில்லா பெட்டிகள் இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது ஒருபுறம் எனில், மறுபுறம் ரயில்களில் வழங்கப்படும் சேவை சரியாக இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வைகள் சுத்தமாக இருப்பதில்லை என பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. இதற்கு ரயில்வே அமைச்சகத்தின், ஹவுஸ் கீப்பிங் மேலாண்மை (என்எச்எம்) பிரிவு அதிகாரி ரிஷு குப்தா பதிலளித்துள்ளார். அதில், கீழே விரிக்க கொடுக்கப்படும் போர்வைகள் ஒவ்வொரு முறையும் துவைக்க அனுப்பி வைக்கப்படுவதாகவும், கம்பளிகள் மாதத்திற்கு ஒருமுறை துவைக்க அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (TNIE) செய்தி ஊடகம், ரயில்வே துறை சார்ந்த ஊழியர்களிடம் பேசியபோது கூடுதல் தகவல்கள் வெளியாகின. அதாவது, பெரும்பாலும் போர்வைகளில் அழுக்கு, கறை, துர்நாற்றம், ஈரப்பதம் இல்லையெனில் அவை மடித்து மீண்டும் பயன்பாட்டுக்காக ரயில் பெட்டியிலேயே வைக்கப்படும் என்றும், மேற்குறிப்பிட்டவை இருந்தால் மட்டும் அவை துவைப்பதற்கு போடப்படும் என்றும் ஊழியர்கள் TNIEவிடம் கூறியுள்ளனர்.
மேலும் சில அதிகாரிகள், "கம்பளிகள் கனமானவை. அவற்றை துவைப்பது கடினமானது. எனவே, அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய நேரம் இது" என்று கூறியுள்ளனர்.
இந்தியன் ரயில்வேயில் பயன்படுத்தப்படும் போர்வை, கம்பளி, தலையணை உறை ஆகியவற்றை துவைக்க 46 சலவை மையங்கள் இருக்கின்றன. இந்த மையம் மைந்துள்ள இடம், சலவை இயந்திரம் ஆகியவை ரயில்வே துறைக்கு சொந்தமானவையாகும். ஆட்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். இது தவிர 25 BOOT சலவை மையங்கள் இருக்கின்றன. இது தனியாருடையதாகும்.
எப்படி இருந்தாலும் தினமும் பயணிகள் பயன்படுத்திய கம்பளிகளை மற்றாரு பயணிகள் பயன்படுத்துவதன் மூலம், தோல் சார்ந்த நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
என்ன மக்களே நீங்கள் அடுத்த முறை ரயிலில் செல்லும்போது கையோடு போர்வைகளை கொண்டு செல்வீர்களா?
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications