வெளிப்படைத்தன்மை இல்லை.. விதிகள் மீறப்பட்டுள்ளன.. தணிக்கை வாரியம் மீது ஜனநாயகன் படக்குழு புகார்
சென்னை: சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த தவெக தலைவர் தற்போது பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் விவகாரம் ஆகியவற்றால் அவர் அப்செட் ஆகியுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நண்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் தங்கள் வாதத்தை காரசாரமாக முன்வைத்தனர். ஜனநாயகன் படக்குழுவும் தணிக்கை வாரியம் விதிகள் மீறப்பட்டிருப்பதாக பதிலடி கொடுத்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்றே தீர்ப்பு வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 2025 செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்டத்தில் சிக்கி 41 மக்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்றும் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

ஜனநாயகன் படம் பிரச்சனை
மறுபக்கம் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படமும் எக்கச்சக்கமான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்தப் படத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பிரகாஷ் ராஜ், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை. படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்திருந்தது. இதை எதிர்த்து ஜனநாயகன் தயாரிப்பு நிறுவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இன்று விசாரணை
அதை விசாரித்த தனி நீதிபதி மறு ஆய்வுக்கான பரிந்துரையை ரத்து செய்து, ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே அதை எதிர்த்து தணிக்கை வாரியம், உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வில் மேல் முறையீடு செய்தனர். அன்றைய தினமே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இதனால் ஜனநாயகன் படம் வெளியாக தடை தொடர்கிறது. இது விஜய் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியமு. இதனை எதிர்த்து ஜனநாயகன் படக்குழு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தணிக்கை வாரியம் காரசார வாதம்
தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஶ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வில் ஜனநாயகன் படம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் தரப்பில், "மறுதணிக்கை தொடர்பாக நாங்கள் ஜனவரி 5 ஆம் தேதியே தகவல் சொல்லிவிட்டோம். 6 ஆம் தேதி தான் படக்குழு வழக்குக்கு சென்றார்கள். ஜனநாயகன் படத்திற்கு சான்று வழங்குவதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை
14 காட்சிகளை நீக்கிய பிறகு படத்தை பார்த்தாது முடிவு செய்யலாம் என்று கூறினோம். அவர்கள் காட்சிகளை நீக்கிவிட்டதால் சான்றிதழ் கேட்டனர். இறுதி முடிமவு எடுப்பதற்கு முன்பாக, புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளதால் உடனடி நிவாரணம் கோர முடியாது, எங்களுக்கு அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் 72 நிமிடங்களுக்கு மேலான படங்களுக்கு தணிக்கை வாரிய தலைவர் தான் முடிவு செய்வார்" என்று கூறினர்.
உணவு இடைவெளி
தணிக்கை வாரியம் சார்பில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாதிடப்பட்டது. அதைக் கேட்ட தலைமை நீதிபதி, "படத்தை பார்த்தது யார். மண்டல தணிக்கை வாரிய அதிகாரி படத்தை பார்த்தாரா. தனி நீதிபதி ஒரே நாளில் முடிவெடுத்துள்ளார். தணிக்கை வாரியத்திற்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி முடிவு செய்துள்ளார். இன்றே உத்தரவு வழங்க சொல்லி, உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
உணவு இடைவெளிக்கு பிறகு வழக்கு மீண்டும் விசாரணை வந்தது. படக்குழு தரப்பில், "டிசம்பர் 18 ஆம் தேதி தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம். டிசம்பர் 19 ஆம் தேதி படத்தை பார்த்தோம். தணிக்கை வாரியம் ஆட்சேபனை செய்த காட்சிகளை நீக்கி கடந்த டிசம்பர் 25ஆம் தேதியே சமர்ப்பித்துவிட்டோம். ஆனால் அது தொடர்பான விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. தணிக்கை வாரியம் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.
ஜனநாயகன் குழு பதிலடி
தனி நீதிபதி உத்தரவில் தவறு இல்லை. விதிகளை ஆய்வு செய்துதான் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார. மறு தணிக்கை என்று எங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். தணிக்கை குழுவின் ஆட்சேபனைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. விதிகள்படி 2 நாள்களில் சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
மறு தணிக்கைக்கான உத்தரவு நகல் எதுவும் வழங்கப்படவில்லை. மத நம்பிக்கைக்கு எதிரான காட்சிகள் இருப்பதால் மறு தணிக்கை செய்வதாக மட்டுமே தகவல் கூறினார்கள். அவசர விசாரணைக்கு தணிக்கை வாரியம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை மற்றபடி படத்தில் என்ன புகார், யார் புகார் வைத்தார் போன்ற எந்த தகவல்களையும் சொல்லவில்லை. தணிக்கை வாரியாத்தின் சார்பில் படத்தை பார்த்தவர்கள் புகார் அளிக்க முடியாது" என வாதிட்டனர்
என்னவாகும் ஜனநாயகன்
இதற்கு தலைமை நீதிபதி, "தணிக்கை வாரியத்திற்கு ஒரு நாள் அவகாசம் வழங்கியிருந்தால் தனி நீதிபதியின் உத்தரவில் கேள்வி எழுந்திருக்காது. தயாரிப்பு நிறுவனத்தின் நிர்பந்தத்தால் தான் வழக்கு அவசர விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் மறு தணிக்கை தகவல் மட்டுமே ரத்து என்றால் ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்க எப்படி சொல்ல முடியும்" என கேள்வி எழுப்பினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications