தம்பி யுவன்! தமிழில் நமாஸ் செய்ய முடியுமா?.. படம் காட்டுவதில் பயனில்லை.. பாஜக எஸ். ஆர். சேகர்
சென்னை: தமிழில் நமாஸ் செய்ய முடியுமா என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு இருவரையும் ஒப்பிட்டு முன்னுரை எழுதிய இளையராஜாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையும் கருத்தையும் பதிவிட்டிருந்தார்.
கருப்பு நிற உடை அணிந்து கொண்டு கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என குறிப்பிட்டிருந்தார். திராவிடன் என கூறியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் யுவன் சங்கர் ராஜாவை விட நான் கருப்பு, நான்தான் கருப்பு திராவிடன், அவர் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கை கருப்பு என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் நீ திராவிடனா, தமிழனா அதை முதலில் சொல்ல வேண்டும்.

யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா சின்னபிள்ளை என்பதால் புரிதல் இல்லை. எருமை மாடு கூடத்தான கருப்பாக இருக்கிறது. அதற்கு அது திராவிடனா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் சீமானின் கருத்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்கலாம். அது நாகரீகமாக இருக்க வேண்டும்.

எருமை மாடு
எருமை மாடு உடன் ஒப்பிட்டு பேசுவது திராவிடத்தை கொச்சைப்படுத்துவது ஆகும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தம்பி யுவன் நீங்கள் பிறப்பால் தமிழன். மதத்தால் இன்று இஸ்லாமியன். இஸ்லாம் தமிழை ஏற்குமா?

பட்ம போட்டு படம் காண்பித்து
தமிழில் பெயர் வைத்து கொள்ள முடியுமா? தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? படம் போட்டு படம் காண்பித்து பிரயோசனமில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார். இதே போல் இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ்தான் என இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூறியிருந்தார்.

தமிழ் கற்பிக்க நிதி ஒதுக்கட்டும்
அதற்கு எஸ்.ஆர். சேகர் கூறுகையில், தம்பி AR ரக்மான் பேச்சை வரவேற்கிறேன். முதலில் ரக்மான் குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றட்டும். துவாவை உருதுவிலிருந்து தமிழுக்கு மாற்றட்டும்...பிறகு தமிழக அரசு குறைந்தது ஒரு 5 இந்தி State ல் தமிழ் கற்பிக்க நிதி ஒதுக்கட்டும்... இதற்கு ரக்மான் உதவினால் தமிழ் பரவும் என தனது பதிவில் எஸ் ஆர் சேகர் குறிப்பிட்டிருந்தார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications