Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாமானிய மாணவர்களுக்கும்.. தரமான கல்வியை கனவு கண்ட மேதை! எஸ்.எஸ்.ராஜகோபாலன் மறைவு பேரிழப்பு!

Subscribe to Oneindia Tamil
S S Rajagopalan

சென்னை: மூத்த கல்வியாளரான எஸ்.எஸ்.ராஜகோபாலன், வயது மூப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். அவரது மறைவு கல்வியாளர்கள் மட்டுமின்றி மாணவர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பல துறைகளில் ஜாம்பவான்கள் அடிக்கடி உருவானாலும், கல்வி துறையில் அத்தி பூத்தாற் போல எப்போதாவதுதான் சிலர் உருவாகிறார்கள். அப்படி உருவான ஒரு சிலரில் மிகவும் முக்கியமானவர்தான் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.

கல்விக்கான பாதை

கல்வி மீதான ஆர்வம் கற்றலிலிருந்துதான் தொடங்குகிறது. ராஜகோபாலனும் அப்படித்தான் கல்வியாளராக மாறினார். இவரது தந்தை பள்ளியின் தலைமை ஆசிரியர். எனவே இயல்பாகவே கற்றல் மீதான ஈர்ப்பு ராஜகோபாலனுக்கு இருந்தது. என்னதான் கல்வியாக இருந்தாலும் அது மதிப்பெண்களுக்கானதாக மட்டுமே இருந்தது. இந்த சிந்தனையை மாற்ற வேண்டும் என்று எஸ்.எஸ்.ராஜகோபாலன் முயன்றார். அவருக்கு இப்படியான மாற்று சிந்தனையை கொடுத்தது அவரது தந்தை சருக்கை சீனிவாச அய்யங்கார்தான்.

புரட்சிகர மாற்றம்

அது 1922ம் ஆண்டு காலம். ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் சென்னை மாகாணம் இருந்தது. அப்போதிருந்த பள்ளியில் கல்வி முறை ஆங்கில வழியில்தான் இருந்தது. இப்படியே போனால் செம்மொழியான தமிழ் மெல்ல அழியும் என்பதை உணர்ந்த சருக்கை சீனிவாசன், சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த விக்டோரியா போர்டு பள்ளியில், தலைமை ஆசிரியர் என்கிற முறையில் தமிழ் வழி கல்வியை தொடங்கினார். அந்த காலத்தில் இது புரட்சிகர மாற்றம்.

தலைமையாசிரியர்

அதைவிட பெரிய விஷயம் என்னவெனில், அக்காலத்தில் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். இருப்பினும் பெற்றோர்களுக்கு கல்விக்கான அவசியத்தை உணர்த்தி, பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முயற்சி எடுத்தார் சருக்கை சீனிவாசன். இதையெல்லாம் செயல்படுத்த அவரிடம் இருந்த ஆயுதம், தலைமையாசிரியர் என்கிற பதவி. அப்பேர்ப்பட்ட உயர்ந்த மனிதரின் மகன்தான் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.

மாற்றத்தின் தொடக்கம்

இந்த புள்ளியிலிருந்துதான் கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் மட்டுமல்ல என்பதை எஸ்.எஸ்.ராஜகோபாலன் கற்றார். இந்த விழிப்புணர்வு, அப்போதைய கல்வி முறையை மாற்ற அவரை தூண்டியது.

ஆசிரியராக, தலைமை ஆசிரியராக இருந்த எஸ்.எஸ்.ராஜகோபாலன், சமச்சீர் கல்விக்கான போராட்டத்தில் தன்னை முன்னிறுத்திக்கொண்டார். வாத்தியாராக இருந்தோம், பணியாற்றினோம், கிடைக்கும் நேரத்தில் டியூஷன் எடுத்து காசு பார்த்தோம், ஓய்வு பெற்றோம் என்று இல்லாமல், தன் மக்களுக்கு சமமான, சீரான கல்வி கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதற்கான குழுவில் இடம்பெற்று பாடதிட்டத்தை உருவாக்க உதவினார்.

கல்வி பணி

அத்துடன் அவரது பணி நின்றுவிடவில்லை. மத்திய அரசின் 'கல்வி உரிமைச் சட்டம்' தமிழ்நாட்டில் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதிலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல்கலை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதிலும் தீவிரமாக செயல்பட்டார். கல்வி என்பது அறிவை வளர்க்கத்தானே ஒழிய, விற்பனைக்கானது அல்ல என்பதை உறுதியாக வலியுறுத்தினார். அதிக கட்டணங்களை வசூலிக்கும் தனியார் பள்ளிக்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். கல்வி பாதுகாப்பு குழு போன்றவற்றின் மூலம் இந்த பணிகளை முன்னெடுத்தார்.

சாமானிய மாணவர்களுக்கும் கல்வி

புத்தக சுமையை குறைப்பது, மனப்பாட கல்வி முறைக்கு மாற்றாக புரிதலுடன் கற்பது போன்ற அம்சங்களை முன்மொழிந்த யஷ்பால் குழுவின் பரிந்துரைகளை, தமிழக சூழலுக்கு ஏற்ப கொண்டுவர பாடுபட்டார். குறிப்பாக அரசு பள்ளிகள் என்பது ஓட்டை உடைச்சலுடன் உள்ள கட்டிடங்கள் எனும் பொது புத்தியை மாற்ற கடுமையாக பணியாற்றினார். வசதி படைத்தவர்களின் குழந்தைகளும் அரசு பள்ளியில் சேர்ந்து கற்கும் அளவுக்கு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

கல்வி சிந்தனை

இவரது முற்போக்கு சிந்தனை பல ஆசிரியர்களை, சமூக பணிகளை நோக்கி நகர்த்தியது. கற்பிப்பது என்பது வெறும் சொல்லிக்கொடுப்பது மட்டும் கிடையாது, அது சமூகத்தை செதுக்கும் பணி என்பதை இவரை பார்த்து மற்ற ஆசிரியர்கள் கற்றனர்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று வயது மூப்பு காரணமாக தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டார். அவரக்கு வயது 95

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+