முதல்வர் இருக்கப்ப! ஆளுநர் பேச்சை எந்த அதிகாரியாவது கேட்பாங்களா? எதுக்கு இந்த அரசியல்? எஸ்.வி.சேகர்
சென்னை: ஆளுநர் ஆட்சி இல்லாத போது எத்தனை அதிகாரிகளுடன் பேசினாலும் ஆட்சியில் உள்ள முதல்வர் சொன்னால்தான் அதிகாரிகளும் கேட்பார்கள் என பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் அரசு சார்பில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதி கேட்கவும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் டெல்லி சென்றுவிட்டார். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்யவும் மீட்பு பணிகள் குறித்து விவாதிக்கவும் ஆட்சியர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.
அதன்படி மத்திய அமைப்புகள், ஆயுத படைகளின் உயர் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் சென்னை ராஜ்பவனில் நடந்தது. இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமான படை, தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இந்த கூட்டம் நடந்தது.
இதில் மாநில அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. முதல்வர் இல்லாத நிலையில் ஆளுநர் கூட்ட நினைத்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநில அரசு அதிகாரிகளே வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கவர்னர் ஆட்சி இல்லாதபோது எத்தனை அதிகாரிகளுடன் பேசினாலும், ஆட்சியில் உள்ள முதல்வர் சொன்னாதான் அதிகாரிகள் கேப்பாங்க மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கே முழு அதிகாரம். இந்த பேரிடர் சூழலில் எதிர் நிற்பவர்கள் இரக்கமின்றி அரசியல் செய்து ஆதாயம் தேடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது1/2 pic.twitter.com/5HyKLSxp84
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) December 20, 2023
இதுகுறித்து எஸ்வி சேகர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கவர்னர் ஆட்சி இல்லாதபோது எத்தனை அதிகாரிகளுடன் பேசினாலும், ஆட்சியில் உள்ள முதல்வர் சொன்னாதான் அதிகாரிகள் கேப்பாங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கே முழு அதிகாரம். இந்த பேரிடர் சூழலில் எதிர் நிற்பவர்கள் இரக்கமின்றி அரசியல் செய்து ஆதாயம் தேடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
6 மாதம் கழித்து வரப்போகிற தேர்தலில் இந்த மழை வெள்ளத்தை வைத்து அறுவடை செய்ய நினைப்பதைவிட வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களை கை தூக்கி உதவுங்கள். அந்த தர்மம் உங்களை காக்கும். இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை! -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications