“கோமாளித்தனம்.. சட்டம் ஒழுங்கு சரியில்லனா எதுக்கு சவுக்கால அடிச்சுக்கிறாரு?” எஸ்.வி.சேகர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை தானே சவுக்கால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதை விமர்சித்திருந்த எஸ்.வி.சேகர், “சட்டம் ஒழுங்கு சரியில்லை எனில் ஏன் சவுக்கால் அடித்துக்கொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது, “நான் இதுவரை நடித்துள்ள சினிமாக்களில் என்னை நானே சவுக்கால் அடித்துக்கொண்டதில்லை. என்னையும் யாரும் சவுக்கால் அடித்தது கிடையாது. அண்ணாமலை செய்தது அரசியலுக்கு புதுசாக இருக்கலாம். ஆனால் அரசியலே தெரியாததாக ஒருவர் கோமாளியாக இருக்கிறார் எனில் அது அண்ணாமலைதான்.

annamalai s ve shekher bjp dmk

சட்டம் ஒழுங்கு சரியில்லை எனில் எதற்காக அவர் சவுக்கால் தன்னை தானே அடித்துக்கொள்கிறார்? தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சரியில்லாததற்கு அண்ணாமலைதான் பொறுப்பா? தமிழகத்தின் டிஜிபி-யா? முதல்வரா? இவர் யார்? பைத்தியக்காரத்தனம், கோமாளித்தனம் என்று இதை சொல்ல வேண்டும்.

இந்த விஷயம் குறித்து நான் டெல்லியில் முறையிட்டிருந்தேன். அண்ணாமலையை மாநில தலைவராக தேர்வு செய்தவர்கள்தான் தங்களை தாங்களே சவுக்கால் அடித்துக்கொள்ள வேண்டும். நல்வாய்ப்பாக நான் முன்கூட்டியே பாஜகவிலிருந்து விலகிவிட்டடேன். இல்லையெனில் என்னை கூப்பிட்டு சவுக்கால் அடித்திருப்பார்கள். இதையெல்லாம் பார்ப்பதற்கு கேவலமாக இருக்கிறது. அண்ணாமலையின் அரசில் பூஜ்ஜியம். இதை நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டேன். 40க்கு பூஜ்ஜியம், நாக்கு மட்டும்தான் வேலை செய்கிறது.

அண்ணாமலை செருப்பே போடமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இனி அவரால் வாழ்நாளில் செருப்பே போட முடியாது. நல்ல வேளை இனி வேட்டி கட்ட மாட்டேன் என்று சொல்லாமல் விட்டுவிட்டார்” என்று கூறியுள்ளார்.


முன்னதாக இன்று காலை கோவை காளப்பட்டி பகுதியில் இருக்கும் தனது வீட்டின் முன்பு அண்ணாமலை சாட்டையால் தன்னை தானே அடித்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் இன்று முன்னெடுத்துள்ள போராட்டத்தை, வரும் நாட்களில் தீவிரப்படுத்துவோம்.

தனிமனிதனுக்கு ஆட்சியாளர் மீது இருக்கும் கோவத்தை காண்பிக்க அல்ல, கண்முன் எதிர்கால தலைமுறை அழிகிறது. கல்வி, பொருளாதார, சட்டம் - ஒழுங்கு சீரழிந்து வருகிறது. போராக இருந்தாலும் பெண்ணின் மீது கைவைக்க கூடாது என்பது தமிழர்களின் மரபு. இன்று பெண்களின் மீது, அவர்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் தொடருகிறது. 6 முறை என்னை சாட்டையால் அடித்துக்கொண்டு இருக்கிறேன்.

முருகனிடம் அதனை வலியுறுத்துவோம். கிடைக்கும் வாய்ப்புகளில் மக்களுக்கு உண்மையை உணர்த்துவோம். காவல்துறையில் இருந்து வெளியே வரும்போது, 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம் & கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளியை கண்டறிந்தாலும், எனது மகளை அந்த தாய் கேட்டார். அந்த கேள்வி என்னை இங்கு கொண்டு வந்தது. சாதாரண நிகழ்வை போல பேசி, பின் மீண்டும் செல்வது எனக்கு வருத்தத்தை தருகிறது. தமிழக மக்களுக்கு வேள்வியாக இதனை செய்ய வேண்டும்.

பாஜகவினர் மக்களுடன் இருங்கள், அவர்களுக்காக உழைப்போம். ஐயா மன்மோகன் சிங் மறைவையொட்டி, இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவிப்பு மதியம் வெளியாகும். நமது மண்ணில் உடலை வருத்தி செய்யும் நிகழ்வுகளுக்கு பலன் இருக்கும். இது சாதாரண நிகழ்வு. முருகனுக்கு 6 சாட்டையடி என்பது, எனக்கு நானே கொடுத்துக்கொண்டது என்பதைவிட, சமுதாயத்தில் நிகழும் குற்றங்களை குறிக்கிறது. தவறு செய்யும் ஆட்சி வெளியேற வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+