ஏன் குருமூர்த்தியை முதலமைச்சராக்கி அழகு பார்க்க நினைக்கிறாரா.. ரஜினிக்கு எஸ் வி சேகர் கேள்வி
சென்னை: ஏன் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை முதல்வராக்கி அழகு பார்க்க நினைக்கிறாரா என ரஜினிக்கு எஸ் வி சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
முதல்வர் பதவி வேண்டாம் என்றும் அதுகுறித்து நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை என ரஜினி கூறியிருந்ததை சுட்டிக் காட்டிய எஸ் வி சேகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அரசியல் மாற்றத்திற்கு மூன்று திட்டங்களை நான் வைத்துள்ளேன். அதில் முதல் திட்டம் தேர்தலுக்கு பிறகு பெரும்பாலான கட்சி பதவிகளை நீக்குவது. அடுத்தப்படியாக இளைஞர்களுக்கு எம்எல்ஏ சீட் வழங்குவது. மூன்றாவதாக முதல்வர் வேட்பாளர்.

தேசிய கட்சிகள் தவிர பெரும்பாலான மாநில கட்சிகளில் அக்கட்சியின் தலைவரே முதல்வராகவும் இருப்பார். முதல்வர் பதவி பற்றி நான் நினைத்துக் கூட பார்த்தது இல்லை. சட்டசபையில் உட்கார்ந்து பேசும் எண்ணம் எனக்கு ஒரு போது்ம இல்லை. எனக்கு அது செட்டும் ஆகாது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை சுட்டிக் காட்டி பாஜக பிரமுகர் எஸ் வி சேகர் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்புகையில் ஏன் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை முதல்வராக்கி அழகு பார்க்க நினைக்கிறாரா என கேட்டுள்ளார்.
அது போல் கட்சி வேறு, ஆட்சி வேறு என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்த ட்வீட்டை மேற்கோள்காட்டி எஸ் வி சேகர் மேலும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கட்சி நடத்த பணமும் ஆட்சி நடத்த ராஜதந்திரமும் தைரியமும் தேவை. ஆகவே ரஜினி சொல்வது நிஜத்தில் நடக்காது.
புரட்சி இந்தியாவில் வெடிக்காது புஸ்வாணமாகிவிடும். கட்சி ஆட்சி இருவர் கையில் இருந்தால் முதலில் சின்னம் முடங்கும். இதுவே வரலாறு என தெரிவித்துள்ளார். இதற்கு எஸ்வி சேகர் கூறுகையில் இந்த ட்வீட்டை மேற்கோள்காட்டி எஸ் வி சேகர் மேலும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கட்சி நடத்த பணமும் ஆட்சி நடத்த ராஜதந்திரமும் தைரியமும் தேவை. ஆகவே ரஜினி சொல்வது நிஜத்தில் நடக்காது என தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications