Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் ஒரு பிடிவாத கேரக்டர்.. என்னை பார்த்து சொன்ன வார்த்தை! சொன்னதை கேட்காத பேரன்.. உடைத்த எஸ்ஏசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறி இருக்கும் நடிகர் விஜய் தனது கட்சியின் இரண்டாவது ஆண்டு துவக்க விழாவை கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார். அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் விஜய் சரியாக பேசுவதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயின் கேரக்டர் குறித்தும், அவரது நம்பிக்கை குறித்தும் பேசியிருக்கிறார் இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று சென்னை அருகே கோலாகலமாக நடைபெற்றது.

SA Chandrasekhar Vijay Jason Sanjay

கட்சியின் முதல் மாநாட்டை போல மிகப் பிரம்மாண்டமாக நடத்தவில்லை என்றாலும் குறிப்பிட்ட சில நிர்வாகிகளுக்கு அனுமதி, பிரம்மாண்ட விருந்து என ஓரளவுக்கு மாஸாக நிகழ்ச்சியை நடத்திக் காட்டி இருக்கிறார் விஜய்.

இந்நிலையில் தனது மகனின் அரசியல் குறித்தும், அவரது கேரக்டர், பேரனின் இயக்குனர் அவதாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார் இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர். இதுதொடர்பாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசியுள்ள அவர்,"ஆரம்பத்தில் விஜய் நடிக்க வரும்போது சந்திரசேகர் மகன் விஜய் என சொன்னார்கள். ஆனால் இப்போது விஜய் ஓட அப்பா சந்திரசேகர் என சொல்றாங்க. அதுவே எனக்கு மிகப்பெரிய பெருமை தான். எல்லா குழந்தைகளும் அவங்க பெற்றோருக்கு இந்த மாதிரி பெருமையை தருவதில்லை.

இளைய தளபதியா இருந்த விஜயை தளபதியாக மாற்றி உலகம் முழுக்க தமிழர்கள் கொண்டாடுறாங்க. ஒரு இயக்குனரா நான் ரொம்ப பெருமையா பார்க்கிறேன். இதே மாதிரி தான் விஜயகாந்த் வளர்ச்சியை பார்க்கும் நான் பெருமைப்பட்டேன். ஏ.ஆர்.ரகுமான், சிம்ரன் அவங்களும் வளரத பார்த்து பெருமைப்பட்டேன். சினிமா ஒரு சின்ன வட்டம். சினிமால நம்ம நிறைய சம்பாதிக்கிறோம். அதுல கொஞ்சம் பேருக்கு தான் ஹெல்ப் பண்ண முடியும். படிக்க வைக்க முடியும்..

ஆனால் அரசியலுக்கு போறப்போ இந்த நாட்டு மீது பற்று இருக்கணும். அப்படி இருந்தாதான் அந்த அரசியலை தேர்வு செய்யணும். ஒரு நடிகனா இருந்து சம்பாதிக்கிறதை விட தமிழ்நாட்டை உயர்த்தனும்னு விஜய்க்கு அக்கறை இருக்கு. ஒரு அப்பாவா இத நான் ரொம்ப பெருமையா தான் பார்க்கிறேன். அரசியல் அப்படிங்கறது ஒரு கடல். அதுல நீந்துவது கஷ்டம். ஆனால் விஜய் அந்த கடல்ல நீச்சல் அடிக்கணும்னு விரும்புகிறார். அரசியல் கஷ்டம்னு நினைச்சிருந்தா விஜய் அரசியலுக்கு வர மாட்டார்.

மக்களையும் அரசியலையும் விஜய் நேசிக்கிறார். அதனால அரசியலுக்கு போயிருக்காரு. பிரச்சனைகள் இருக்கிறது விஜய்க்கு தெரியும். அதை எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்கு.. அந்த நம்பிக்கை கண்டிப்பா ஜெயிக்க வைக்கும். விஜய் ஓட தனிப்பட்ட ஒரு கேரக்டர் என்னன்னு நிறைய பேருக்கு தெரியாது. அதையே ஒரு படத்துல டயலாக் பேசி இருப்பார். ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. அந்த மாதிரி தான் விஜய் ஒரு முடிவு பண்ணிட்டா மாத்தவே முடியாது. ஜெயிக்கிற வரைக்கும் விடவே மாட்டார். அவ்வளவு உறுதியாக இருப்பார்.

சினிமாவுல ஆரம்ப கால கட்டத்துல விஜய் கூட இருந்தேன். அப்போ ஜெயிக்கணும்னு வெறியோட விஜய் வேலை பார்த்தார். சினிமாவுல வேகம் வெறியோடு ஜெயிச்சுட்டார். இப்போ அரசியலுக்கு வந்திருக்கிறார். கண்டிப்பா அந்த நம்பிக்கை விஜயை ஜெயிக்க வைக்கும். நான் என் பேரன் கிட்ட விஜய் மாதிரி ஹீரோ ஆயிடு அப்படின்னு சொன்னேன். இல்ல டைரக்டர் ஆக இருக்கிறதுல தான் ஒரு த்ரில் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு இயக்குனர் ஆயிட்டார். விஜய் நடிக்கணும்னு ஆசைப்பட்டார். நாங்க அத பண்ணினோம். அதே போல எங்க பேரன் இயக்குனராக ஆசைப்படுகிறார். அதனால எங்க வீட்ல எல்லாருமே அதை ஏத்துக்கிட்டோம்" என பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+