ரொம்ப ஈஸியா போகலாம்.. சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்.. இன்று முதல் பயணிக்கலாம்
சென்னை: சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவின் கோட்டயத்துக்கு சபரி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இன்று முதல் பயணத்தை தொடங்க உள்ளது.
கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். இதனால் சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வரும் நிலையில் பக்தர்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.

41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27 ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் அய்யப்ப சாமி கோவிலுக்கு செல்ல மாலை அணிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-கோட்டயம் (கேரளா) இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்: 06027/06028) இயக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல்-கோட்டயம் சிறப்பு கட்டண ரயில் (06027) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கேரளாவின் கோட்டயத்தை சென்றடையும். இந்த ரயில் இன்று பயணத்தை தொடங்கும். அதன்பிறகு வரும் 26ம் தேதி, டிசம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்கும்.
மறுமார்க்கமாக கோட்டயம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06028) வாரந்தோறும் திங்கட்கிழமை மட்டும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோட்டயம் ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் நாளை முதல் பயணத்தை தொடங்கும். அதன்பிறகு வரும் 27 ம் தேதி டிசம்பர் மாதம் 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி மாதம் 1ம் தேதி வரை திங்கட்கிழமை தோறும் கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
இந்த சிறப்பு ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி 2, 3 அடுக்கு ஏசி பெட்டி 6, 3 அடுக்கு ஏசி Economy பெட்டி 4, 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இந்த ரயில் இருமார்க்கமாக பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போடனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் வடக்கு ரயில் நிறுவனங்களில் நின்று வருகின்றன. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications