சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எத்தனை முறை முயற்சித்தும்... ஐயப்பா என்ன சோதனை இது.. முன்பதிவு முறையால் ஏமாற்றத்தில் பக்தர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதித்த போதும் ஆன்லைன் முன்பதிவு செய்ய முடியாததால் பக்தர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு சபரிமலை சீசன் களை இழந்து போனது. சபரிமலைக்கு செல்வோர் கொரோனா சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதுடன் ஆன்லைன் முன்பதிவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Sabarimala devotees unhappy over Online Darshan Registration

கடந்த காலங்களிலும் ஆன்லைன் முன்பதிவு முறை இருந்தது. பம்பையில் இருந்து குறிப்பிட்ட தொலைவு மலையேறிய பின்னர் ஆன்லைன் முன்பதிவர்கள் மட்டும் தனியே அனுப்பி வைக்கப்படுவர். அந்த பாதையில் எந்த தடங்கலும் இல்லாமல் விரைவில் சன்னிதானத்தின் காத்திருப்பு பந்தலுக்கு சென்றுவிடலாம்.

இருப்பினும் ஐயப்பனை காத்திருந்து தரிசனம் செய்வதை கடமையாக கொண்ட பக்தர்கள் பல மணிநேரம் பொறுத்திருக்கவும் செய்தனர். இந்த ஆண்டு இத்தனை கெடுபிடிகள் இருந்ததால் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது.

புதுப்புது வரிகள் போடும் அதிகாரத்தை யார் கொடுத்தது? சென்னை மாநகராட்சிக்கு ஸ்டாலின் சரமாரி கேள்வி..!புதுப்புது வரிகள் போடும் அதிகாரத்தை யார் கொடுத்தது? சென்னை மாநகராட்சிக்கு ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

ஒரு கிராமத்தில் சராசரியாக 50 பேர் மாலை அணிவித்து இருந்தால் இந்த ஆண்டு 5 பேர் கூட இல்லை என்கிற நிலைமைதான். அதுவும் கொரோனா கெடுபிடிகள், ஆன்லைனில் முன்பதிவுக்காக முயற்சித்து கொண்டே இருப்பது ஆகியவை பக்தர்களை ஏமாற்றம் அடைய வைத்துவிட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு யாத்திரை செல்லும் புதிய நடைமுறைக்கு மாற்றிக் கொண்டு வருகின்றனர் பக்தர்கள்.

English summary
Sabarimala devotees unhappy over the Online Registration for the Darshan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X