சபரிமலையின் ஐயப்ப பக்தர்களுக்கு அறிவிப்பு.. ஆடி மாத பூஜைக்காக இன்று கோயில் நடை திறப்பு.. முன்பதிவு?
சென்னை: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.. ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.. இதுகுறித்து ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது.. இந்த கோயிலுக்கு உலகத்தின் பல மூலை முடுக்குகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

பக்தர்கள் கூட்டம்
முக்கியமாக கார்த்திகை, சித்திரை விசு, மாதாந்திர பூஜை உள்ளிட்ட நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.. அப்போது கோயிலில் நடக்கும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
எனவே, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இன்று பூஜை நடக்காது
தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும் நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
சபரிமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவக்கிரக கோவில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 13ம் தேதி நடைபெற்றது. திருமண தடை, குழந்தை பாக்கியம், தீராத நோய்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த அம்மனை பக்தர்கள் நாடி வருவார்கள்.. இங்குள்ள நவகிரக சன்னதியிலும் தங்களது கோரிக்கையை வைத்து பிரார்த்திக் கொள்வார்கள்.
இந்த பிரதிஷ்டைக்காக 11ம் தேதி திறக்கப்பட்ட கோவில் நடை 13-ஆம் தேதி இரவு மூடப்பட்ட நிலையில், இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
தரிசனத்துக்காக நடை திறப்பு
கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறுமே நடைபெறுமாம்.. அதேபோல, நாளை வியாழக்கிழமை முதல் 21 -ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.. அதாவது, 21-ந் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறந்திருக்கும்.
இதையடுத்து, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன.
மீண்டும் சாத்தப்படும் நடை
வருகிற 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.. பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதையடுஇத்து மாதாந்திர பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் முன்பதிவு ஜரூராக தொடங்கியுள்ளது.
நிறை புத்தரி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் ஜூலை 29ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்று பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
ஆகஸ்ட் மாதம் திருவோணம் பண்டிகை கேரளாவில் கொண்டாடப்பட வருகிறது.. இந்த திருவோணம் திருவிழாவிற்காகவும் கோவில் நடை திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications