அரசியல்வாதிகள் மக்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது விழா முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

SAC says that politicians should be careful to the people of Tamilnadu as they are aware of freebies

அப்போது அவர் கூறுகையில் மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசியல் வியாபாரமாக்காதீர்கள். அரசியல்வாதிகள் பணம், இலவச பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் தற்போது மாறியுள்ளது.

எனவே மக்களிடம் அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெறுவர். நான்கைந்து ஆண்டுகளாக திரைப்படத் துறை அழிவை நோக்கி மோசமாக உள்ளது.

அரசு அதிகாரிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தேர்தல் முதற்கொண்டு நடிகர்கள் சங்கம் வரை அனைத்திலும் தலையிடுகிறார்கள் என எஸ் ஏ சந்திரசேகர் குற்றம்சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+